TDS நண்பன் நாட்டிலேயே முதல் முறையாக வருமான வரித்துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக “TDS நண்பன்" என்ற பெயரில், பல்வேறு விதிகள், கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான காலக்கெடு மற்றும் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தண்டனை விதிகள் போன்ற TDS தொடர்பான கேள்விகளுக்கு பிரத்தியேகமாக தகவல்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் Chatbot, சென்னை வருமான வரித் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த Chatbot பயனர்களுக்கு ஏற்ற வகையிலும் சுலபமாக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு இடையே இடைமுகமாக 24 X 7 செயல்படும் நோக்கம் கொண்டது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில், அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இச்செயலி TDS மற்றும் TCS சம்பந்தமான, பொது வெளியில் தேவைப்படும் தகவல்களை உள்ளடக்கி அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த chatbot செயலியை Play Store / App Store-இலிருந்து Android மற்றும் iOS இரண்டிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி இணையதளத்தில் (www.tnincometax.gov.in) கிடைக்கப்பெறும் URL இணைப்பு வாயிலாகவும் அணுகலாம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்