இ-கிராம ஸ்வராஜ் செயலி கிராம பஞ்சாயத்துகளால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், பட்ஜெட் மதிப்பீடு, கணக்கியல், பணி மேலாண்மை மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை வழங்குவதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனைக் கொண்டுவருவதே இ-கிராம ஸ்வராஜ் (e-GramSwaraj) செயலியின் நோக்கமாகும். பஞ்சாயத்துகளால் செயல்படுத்தப்படும் பணிகளைக் கண்காணிப்பதில் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். பணிகளை அடையாளம் காணுதல், புவி-குறியிடுதல், முன்னேற்ற அறிக்கையிடல், நிதி கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு வாரியான அறிக்கைகளை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் மூலம் பஞ்சாயத்து பணிகளின் நிகழ்நேரக் கண்காணிப்பிற்கு செயலி வழிவகை செய்கிறது. இ-கிராம ஸ்வராஜ் தகவல் பலகை மற்றும் செல்பேசி இடைமுகம் மூலம் பஞ்சாயத்து தகவல்களை பொதுமக்கள் அணுகுவதன் மூலம் இந்த அமைப்புமுறை வெளிப்படைத்தன்மையை எளிதாக்குகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்