சட்டம் மற்றும் ஒழுங்கு பேணி காக்கும் பொருட்டும், குற்றங்கள் நடைபெறா வண்ணம் பல்வேறு சீரிய முயற்சிகளையும், தொழில்நுட்ப யுத்திகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உடனடி உதவி மற்றும் இதர சேவைகளை எளிதாக பெறும் பொருட்டு, பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய “காவல் உதவி“ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. காவல் உதவி செயலியின் சிறப்பம்சங்கள் இக்காவல் உதவி செயலியில் 20 முக்கிய சிறப்பம்சங்களுடன் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய “காவல் உதவி“ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது, பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக பின்வரும் சேவைகள் இச்செயலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது "அவசரம்" உதவி பொத்தான் - பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் அவசர காலங்களில் இச்செயலியில் உள்ள சிவப்பு நிற “அவசரம்“ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் குறுகிய அளவிலான வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு துரித சேவை வழங்கப்படும். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101)- அலைபேசி வாயிலாக பயனாளர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை தொடர்பான வாய்வழி நேரடி புகார்களை, அவசரகாலங்களில் கட்டுப்பாட்டுறையை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பொருட்டு, “Dial-100“ செயலியானது “காவல் உதவி“ செயலின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதன் மூலம், பயனாளர் விவரம் மற்றம் தற்போதைய இருப்பிட விவரம் கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு துரித சேவை வழங்கப்படும். அலைபேசி வழி அவசர கால கோரிக்கை / புகார் அளித்தல் (Mobile Based complaint): பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், மூதியோர், வணிகர்/வர்த்தகர்கள் மற்றும் இதர அவசர கால கோரிக்கைகள் / புகார்கள் நேரடியாக தேர்வு செய்து உரிய விவரங்களுடன் புகார் தொடர்பான படங்கள்/ குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றும் செய்து, கட்டுப்பாட்டு அறையில் மூலமாக துரித சேவை பெறலாம். இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (அவசரமற்ற காலங்களில்) (Location sharing): பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, பணி / இதர பயணங்கள் செல்லும் பொழுது, நேரடி இருப்பிட விவரம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்களின் உறவினர்கள் / நண்பர்கள் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி (Police Station Locator) : இச்சேவையின் மூலம் பயனாளர்கள் தங்கள் அருகாமையிலுள்ள/ தேவையான காவல் நிலையம் அறியப்பட்டு, நேரடி அழைப்பு மற்றும் இருப்பிடம் அறிந்து செல்லும்(Navigation) வசதி செய்யப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல் (Control Room Directory) - பயனாளர்கள், மாவட்ட / நகரங்களின் காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிந்து நேரடியாக அழைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள் (Cyber Financial Related Complaint): பயனாளர்கள், இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பாக, 24 மணி நேரத்திற்குள்ளாக கட்டுபாட்டு அறையை நேரடியாக தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்து உரிய தீர்வு மற்றும் நடவடிக்கைகளை பெரும் வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய இணைய குற்றப் பிரிவு இணையத்தில் (National Cyber Crime Reporting Portal) புகார்களை பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி (Other Emergency Helplines) - மாநில அளவிலான இதர அவசர கால உதவி எண்கள் அடங்கிய தகவல்கள் மற்றும் நேரடியாக அழைக்கும் வசதிகள் பொதுமக்களின் எளியாக பயன்பாட்டிற்க்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.. அவசர கால அறிவிப்புகள் / இதர தகவல்கள் அறியும் வசதி: பயனாளர்களுக்கு கட்டுப்பாட்டு அறையின் மூலமாக அவசர கால முக்கிய அறிவிப்புகள் / இதர தகவல்களை (Alert/Notifications) பகிரும் பொருட்டு இச்சேவையானது கட்டமைக்கப்பட்டுள்ளது. வாகன விவரம் அறிதல் (Vehicle Verification): பயனாளர்கள் இச்சேவையின் வாயிலாக திருட்டு/ காணமல் போன வாகனங்களின் விவரம் தமிழக காவல்துறையின் இ-சேவை தளத்தின் வாயிலாக (CCTNS) அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி (E-Payment): போக்குவரத்து தொடர்பான விதி மீறல்களுக்காக வழங்கப்பட்ட இ-ரசீது / வாகன / ஓட்டுநர் உரிமம் எண் கொண்டு ஒன்றிய அரசின் E-Challan இணையதளத்தில் அபராதம் தொகையை எளிய முறையில் செலுத்துவதற்க்கு வசதியாக தமிழக காவல் துறையின் இணைய இ-சேவை வாயிலாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை (Police Verification Services): இச்சேவையின் மூலம் தனிநபர் குறித்த விவரங்கள் தனக்காகவும், வாடகை மற்றும் பணி அமர்த்துதல் தொடர்பாக காவல்துறையின் சரிபார்ப்புசான்று காவல்துறையின் இணைய இ-சேவைவாயிலாக பெரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைந்த ஆவணங்கள் குறித்தபுகார் (Lost Document Report): காவல்துறையின் இணைய இ-சேவை வாயிலாக தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. CSR / FIR –குறித்த விவரம்: காவல்துறையின் இணைய இ-சேவை வாயிலாக CSR / FIR ஆவணங்கள் / தகவல்கள் பெரும் வசதி செய்யப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நபர்கள் இச்சேவை மூலம் பதிவு செய்யப்பட்டCSR / FIR மற்றும் அலைபேசி எண் மூலமாக உரிய ஆவணங்கள் / தகவல்கள் பெற இயலும். காவல்துறையின் சமூக ஊடக சேவைகள் (Social Media Connect): காவல்துறையின் அன்றாட முக்கிய தகவல்கள் மற்றும் இதர மக்கள் சார்ந்த சேவைகள் குறித்த தகவல்கள் இச்செயலின் சேவை மூலம் உடனுக்குடன் அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி (TN Police Citizen App) / 112 இந்தியா (112-India App) – பொதுமக்கள் காவல்துறையின் குடிமக்கள் சேவைகள் மற்றும் 112-இந்தியா (112-India App) செயலிகளை நேரடி பதிவிறக்கம் செய்யவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்யும் வழிகள் காவல் உதவி கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள விரைவுக் குறியீட்டினை ஸ்கேன் செய்யவும். காவல் உதவி செயலியை Google Play Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்தும் பயன் பெறலாம். ஆதாரம்: தமிழ்நாடு அரசு