அஞ்சல் வழி பிரசாதம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அஞ்சல் துறையுடன் இணைந்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பிரசாதங்களை அஞ்சல் மூலம் மக்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள 48 கோயில்களின் பிரசாதத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in மூலமாகவோ அல்லது திருக்கோயில் கைப்பேசி செயலி மூலமாகவோ பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் பக்தர்கள் தங்களுக்கு எந்த கோயிலின் பிரசாதம் தேவை, முகவரி, தேவையான அளவு மற்றும் இதர விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், தபால் துறையினர் கோயில் அதிகாரிகளிடம் இருந்து பிரசாதத்தைப் பெற்று, வேக அஞ்சலில் பாதுகாக்கப்பட்ட உறைகளில் பக்தர்களின் வீட்டு வாசலிலேயே வழங்குவர். வ. எண் கோயிலின் பெயர் பிரசாத விவரங்கள் விலை (ரூ) 1 தேவராஜசுவாமி கோயில்காஞ்சிபுரம் 631501 குங்குமம், மஞ்சள் காப்பு, சுவாமி புகைப்படம் 100 2 வடபழனி ஆண்டவர் கோயில்வடபழனி, சென்னை 600026 சுவாமி புகைப்படம், விபூதி 70 3 லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்சோளிங்கர் 631102 கல்கண்டு, முந்திரி, உலர் திராட்சை, குங்குமம், சுவாமி புகைப்படம் 145 4 அருணாச்சலேஸ்வரர் கோயில்திருவண்ணாமலை 606601 சுவாமி புகைப்படம், விபூதி, குங்குமம் 10 5 சுப்பிரமணியசுவாமி கோயில்திருத்தணி 631209 குங்குமம், விபூதி, சுவாமி புகைப்படம் 100 6 தியாகராஜசுவாமி கோயில்திருவொற்றியூர், சென்னை 600019 குங்குமம், விபூதி, சுவாமி புகைப்படம், வில்வம் 50 7 தேவி கருமாரியம்மன் கோயில்திருவேற்காடு, சென்னை 600077 குங்குமம், விபூதி, திருசாம்பல், சுவாமி புகைப்படம் 50 8 காமாட்சி அம்மன் கோயில்மாங்காடு 600122 குங்குமம், மஞ்சள்,சுவாமி புகைப்படம் 30 9 பார்த்தசாரதி கோயில்திருவல்லிக்கேணி, சென்னை 600005 குங்குமம், மஞ்சள், சுவாமி புகைப்படம் 80 10 கபாலீஸ்வரர் கோயில்மயிலாப்பூர், சென்னை 600004 குங்குமம், விபூதி 30 11 அங்காளம்மன் கோயில்மேல்மலையனூர் 604204 குங்குமம், விபூதி, புற்று மண், சுவாமி புகைப்படம், அம்மன் கயிறு 10 மேலே உள்ள கட்டணங்கள் அஞ்சல் கட்டணம் சேர்க்கப்படாத கட்டணம் ஆகும். இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் பிரசாதங்களை முன்பதிவு செய்யும் வசதியுள்ள தமிழ்நாட்டின் வேறு சில முக்கிய கோயில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வ. எண் கோயிலின் பெயர் பிரசாத விவரங்கள் விலை (ரூ) 1 மாரியம்மன் கோயில்சமயபுரம் குங்குமம், விபூதி, மஞ்சள், சுவாமி புகைப்படம் 30 2 சுவாமிநாத சுவாமி கோயில்சுவாமிமலை 612302 குங்குமம், விபூதி 15 3 அரங்கநாதசுவாமி கோயில்ஸ்ரீரங்கம் 620006 கல்கண்டு, மஞ்சள் 19 4 சுப்பிரமணியசுவாமி கோயில்திருப்பரங்குன்றம் 625005 விபூதி, சுவாமி புகைப்படம் 70 5 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்மதுரை 625001 தாழம்பு கும்குமம், சுவாமி புகைப்படம், மாங்கல்ய சரடு 100 6 சுப்ரமணியசுவாமி கோயில்திருச்செந்தூர் 628215 இளையதிருநீர், புத்தமுது, சுவாமி புகைப்படம் 120 7 தண்டாயுதசுவாமி கோயில்பழனி 624601 பழனி பஞ்சாமிர்தம், புகைப்பட சட்டகம், விபூதி 140 8 சுப்பிரமணிய சுவாமி கோயில்மருதமலை 641046 குங்குமம், விபூதி, புகைப்படம் 66 மேலே உள்ள கட்டணங்கள் அஞ்சல் கட்டணம் சேர்க்கப்படாத கட்டணம் ஆகும். கோயில் பிரசாதத்தை வீட்டு வாசலிலேயே பெற விரும்பும் பொதுமக்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் ‘திருக்கோயில்’ மொபைல் செயலி மூலமாகவோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யலாம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்