பிரதமரின் வேளாண் மொபைல் செயலி விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலியை (PM Kisan Mobile App) மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் (Union Agriculture and Farmers’ Welfare Ministry) உருவாக்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லது கைரேகையில்லாமல், மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் மற்ற நூறு விவசாயிகளுக்கும் அவர் உதவமுடியும். இதன் மூலம் மாநில அரசு அதிகாரி ஒருவர், 500 விவசாயிகளின் மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்க்க முடியும். இதன் மூலம் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியளிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் பயனடைகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்