இந்திய ரயில்வேயின் அனைத்து பயணிகள் சேவைகளையும் ரயில்ஒன் செயலி ஒருங்கிணைக்கிறது. இது ரயில்வேயுடனான பயணிகளின் தொடர்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ரயில்ஒன் செயலி அம்சங்கள் இது எளிதில் பயன்படுத்தக் கூடிய இடைமுகத்துடன் கூடிய விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய பயன்பாடாகும். இது கீழ்கண்ட அணைத்தது பயணிகள் சேவைகளையும் ஒருங்கிணைக்கிறது: முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகள் 3% தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்வது ரயில் பயணத்தை கண்காணிக்கும் வசதி பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் சேவை ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் உணவு முன்பதிவு செய்யும் வசதி ரயில் நிலையங்களில் பயணிகளின் பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிலாளர்களை முன்பதிவு செய்தல் வாடகை கார்களை முன் பதிவு செய்யும் வசதி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து வழங்கப்படும். மேலும் இந்த இணையதளத்தால் ரயில் ஒன் செயலியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரயில் கனெக்ட் மற்றும் யுடிஎஸ் செயலிகளின் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் உள்நுழையும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. எப்படி பயன்படுத்துவது இந்த செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.