மஹிதிசக்தி

கிடைக்கும் சேவைகள்:

பொது மக்களுக்கு தேவைப்படும் படிவங்கள், பூர்த்தி செய்ய வேண்டிய விபரங்கள், கட்டணங்கள், விண்ணப்ப படிவங்களைப் பரிசீலனை செய்ய தேவைப்படும் கால அளவு.

செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தகவல்கள்

குறைதீர்க்கும் குழுக்கள்/ தீர்ப்பாயங்கள்

தேசிய வயது முதிர்ந்தோருக்கான ஓய்வூதியத்தினை பெற மின்னணு மூலம் படிவங்களை அனுப்புதல், தண்ணீர், ரேஷன் அட்டை தொடர்பான குறைகளை தீர்க்க படிவங்களை அனுப்புதல்.

அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடுதல்.

1000த்துக்கும் அதிகமான இரத்ததானம் செய்ய முன் வந்துள்ளோரின் ரத்த வகை, முகவரி, தொலைபேசி எண்கள்

விதை, உரம், பூச்சிக்கொல்லி, பயிர்பாதுகாப்பு மருந்துகள், இயற்கை உரம் பற்றிய விபரங்கள்.

வாக்காளர் பட்டியல் பற்றிய விபரம் (நியாயமான பணிகளுக்கு மட்டும்)

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோர் பட்டியல்

இணைய வழி விண்ணப்படிவங்கள்

கிடைக்கும் சேவைகள்:

இணைய தளங்களுக்குச் சென்று குஜராத் அரசு சம்பந்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பார்த்தல்

குஜராத்தி, ஆங்கில மொழிகளில் விண்ணப்பப்படிவங்களை பார்த்தல்.

அரசாங்கம் முடிவுகளைக் கொண்ட புத்தகம் கிடைக்கும் சேவைகள்

குஜராத் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை இணையதளம் மூலம் பார்த்தல், விபரம் தெரிந்து கொள்ளுதல்

இரண்டு மொழி சேவை - அரசாங்க முடிவுகளை குஜராத்தி, மற்றும் ஆங்கிலத்தில் பார்க்கலாம்

அடிக்கடி பயன்படுத்தப்படும் அரசாங்க முடிவுகளை எளிதாக பார்க்க வசதி

குஜராத் மாநில அறிவு பெட்டகம்

கிடைக்கும் சேவைகள்:

உங்கள் ஆலோசனைகள், அறிவுரைகளை குஜராத் அரசுக்கு அனுப்பலாம்.

மாதத்திற்கு ஒரு முறை அரசு அலுவலர்கள், நிபுணர்களுடன் அந்தந்த மாதத்திற்கான தேர்வு செய்யப் பட்ட தலைப்புகளில் கலந்துரையாடல்.

நமது ஆலோசனைகள், மாதாந்திர தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆலோசனைக்குழுவில் ஒரு உறுப்பினராக நாமும் அழைக்கப்படுவோம்.

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தல்

கிடைக்கும் சேவைகள்:

இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதி

விளம்பரத் தகவல்

பயிற்சி நிகழ்வுகள் பற்றிய தகவல்

இணைய வழியில் பதிவு செய்தோர் தங்கள் வேலைவாய்ப்பு குறித்த நிலமையை பார்த்தல்

வேலைவாய்பு செய்திகள் மற்றும் வழிகாட்டுதல்

https://employment.gujarat.gov.in என்ற இணைய தளத்தில் இச்சேவைகளை பெறலாம்.

மின் மாநகரம்

மாநகர பொது மையம்-ஓரிட சேவை மையம்
கிடைக்கும் சேவைகள்:

பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளையும், செயல்படும் 6 மாநகர பொது மையங்களிலும் பெறலம்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள்

கட்டிட வரைபடம்

பிரதம மனிதவளம் மற்றும் கல்வி

மாநகர சுகாதாரம்

தண்ணீர் வழங்குதல்

கழிவுநீரகற்றுதல், சாலை வசதி

தெரு விளக்குகள்

பூங்கா மற்றும் தோட்டம்

சேவை வரிகளை செலுத்துதல்

தேவைப்படும் பத்திரங்கள், படிவங்கள், இன்னும் பிற உதவிகளுக்கான ஓரிட சேவை மையம்.

விரைவான சேவையினை அலுவலக நேரத்திற்கு பிறகும் பொது மக்களுக்கு வழங்குதல்

இச்சேவையை பெற www.egovamc.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

மக்கள் சேவை நிலையங்கள்

கிடைக்கும் சேவைகள்:

90 வகையான பொதுவான சேவைகள், 44 விதமான தஸ்தாவேஜிகள், இன்னும் பிற சேவைகள்

நிலம் சம்மந்தப்பட்ட சேவைகள், விணியோகம் தொடர்பான பணிகள், வரி சேகரிப்பு/வசூல், லைசென்ஸ் வழங்குதல், சான்றிதழ்கள் வழங்குதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம், தாக்கல்கள் குறித்த சேவைகள்.

முடிவெடுக்கப்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அவரவர் வீடுகளிலேயே கொண்டுபோய் வழங்குதல்

உடல் ஊனமுற்றோர், படிக்காத மக்கள், வயது முதிர்ந்தோருக்கான சிறப்பு சலுகைகள்

பொதுமக்கள் மொபைல் மூலம் (SMS) தமது சேவை குறித்த நிலையினை அறிதல்.

நேரடியாக இணையதளம் மூலம் நிலை அறிதல், படிவம் பெறுதல்.

தானியங்கி தொலைபேசி மூலம் எந்த வேலையிலும் பதில்களை பெரும் வாய்ப்பு

மின் தாரா

கிடைக்கும் சேவைகள்

கணிணி மயமாக்கப்பட்ட நில உரிமை பதிவேடு.

நில உரிமைச் சான்றுகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.

சேதம் அடைந்த பதிவேடுகள்

நிலப்பயன்பாடு, பயிரிடும் பயிர்கள், தண்ணீர் வசதி, பயன்படுத்தப்படும் மின் இயந்திரங்கள், மரங்கள் குறித்த விரிவான தகவல்கள்.

இது குறித்த விபரம் பெற www.revenuedepartment.gujarat.gov.in என்ற இணைய தளத்திற்குள் செல்லவும்.

பத்திரப் பதிவு

கிடைக்கும் சேவைகள்

பத்திரங்களை பதிவு செய்தல்

வரி வசூல்

சொத்துக்களை மதிப்பீடு செய்தல்

பத்திரங்களை பாதுகாத்தல்

வியாபார விபரங்கள் பற்றிய சோதனை

ஸ்வாகத் (மாநிலம் தழுவிய பொதுமக்கள் குறைகளை

தொழில்நுட்பம் பயன்படுத்தி பரீசிலுக்கும் திட்டம்)

குஜராத் மாநில முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்தக் கூடிய ஒர் உன்னதமான திட்டம் ஸ்வாகத்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் ஒவ்வொரு மாதமும், நான்காவது வியாழக்கிழமை ஸ்வாகத் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அலுவலர்கள் குடிமக்களின் குறைகளை விசாரித்து, தீர்வு காண்கிறார்கள். எவ்வாறு எனில்,

ஒரு குடிமகனின் குறைதீர் மனு பதிவு செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட (தொடர்புடைய) அலுவலர்களுக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அதன் மீதான நடவடிக்கை/பதிலை 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டியது அவர்களது கடமை.

மாலை 3 மணிக்கு மாநில முதலமைச்சர், மாநில அனைத்து மாவட்ட உயர் அலுவலர்களுடன் தொலை தொடர்பு ஒளிப்பட மாநாடு (வீடியோ கான்பரன்ஸ்) நடத்துவார். அதற்கு முன்னதாகவே அனைத்து மனுக்களின் மீதான நடவடிக்கை-பதிலுடன் உயர் அலுவலர்கள் தயாராக இருத்தல் வேண்டும்

மனுதாரர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் மனுவை முதலமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொள்வார்.

சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட நடவடிக்கை/பதிலை மனுதாரர் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியர், வருவாய் உயர் அலுவலர்கள், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையிலும் பரிசீலிக்கப் படுகிறது.

ஒரு தீர்மானமான ஏற்கக்கூடிய தீர்வு உடனடியாக மனுதாரருக்கு வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மனுதாரரும், தங்கள் மனுவிற்கு ஓர் உத்திரவாதமான பதிலை பெறுகின்றனர்.

மின் கிராமம் - விஷ்வ கிராம் திட்டம்

ஒவ்வொரு கிராமத்தில் உள்ள குடும்பங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை வழங்க உருவாக்கப்பட்ட அமைப்பு “மின் கிராம பஞ்சாயத்து கண்காணிப்பு அமைப்பு”.

இது, ஒவ்வொரு குடும்பத்தாரிடம் இருந்து பெறப்படும், குடும்ப உறுப்பினர்கள் - தகவல்கள் பற்றிய அமைப்பு. இது மக்களுக்கு வருவாய், ஜாதி சான்றிதழ், இருப்பிடம், பிறப்பு, இறப்பு, நன்னடத்தை, வறுமை கோட்டிற்கு கீழ்உள்ளோர் போன்ற சான்றிதழ்கள் வழங்க உபயோகப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்தின் சொத்து பற்றிய தகவல் களஞ்சியம், தகுந்த சான்றிதழ்கள் வழங்குவதற்கும், பஞ்சாயத்தில் வரி வசூல் விதிப்பு மற்றும் வருமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.