ஆன்லைனில் நில ஆவணங்கள் - புய்யா

ஒரு தாலுகாவில் உள்ள ஊர்/கிராமத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட நிலத்தின் (கஷரா) பட்டா எண், பெயர், பரப்பு உள்ளிட்ட விபரங்களை அறிதல்/மாற்றுதல்/நீக்குதல்/பதிவு செய்தல்

நிலங்களை வாங்கி/விற்ற பின்னர் புதிய பதிவு எண் மற்றும் பட்டா எண்ணை தன்னிச்சையாக உருவாக்குதல்

வீட்டு வரி , சொத்து மதிப்பு உள்ளிட்ட விபரங்கள்

மேற்கண்ட விபரங்களைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்

ஆன்லைனில் அரசாங்க அறிவிப்புகள்

அரசின் அனைத்து அறிவிப்புகளும் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும்.

அறிவிப்புகள் பி.டி.எஃப் வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்து படிக்கும்படி இருக்கும்.

பொது பயன்பாட்டுப் படிவங்கள்

பிறப்பு/திருமணம்/சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு குடியுரிமை தேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெறுதல்.

விண்ணப்பப் படிவங்கள் பி.டி.எஃப் வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.

மின் அஞ்சல் டைரக்டரி (தொகுப்பகம்)

முதலமைச்சர், தலைமை செயலாளர், கூடுதல்/ துணை செயலர்கள்,முதன்மை செயலர்கள்,மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்துறை செயலர்கள் உள்ளிட்ட மாநில அரசின் அதிகாரிகள்/அலுவலர்களின் பெயர், தொடர்பு முகவரி மற்றும் மின்னஞ்சல் விபரங்களைப் பெறுதல்

தாங்கள் அளிக்க வேண்டிய குறைகள்/மனுக்கள்/புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலம் நேரடியாக தெரிவிக்கலாம்.

ஆன்லைன் மூலம் குறை தீர்ப்பு

தீர்வு காணப்பட வேண்டிய குறைகளை ஆன்லைன்(இணைய வழி) மூலம் விண்ணப்பித்தல்

ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளுதல்

ஆன்லைனில் ரசீது

விற்பனை வரி, கலால் கரி,தொழில் வரி,நில வரி முதலியவற்றுக்கான வரிப்பணம் செலுத்துதல்.

விபரங்களை அளித்து பதிவு செய்த பின் பணம் செலுத்துதல்.

ஆன்லைனில் வரிப்பணம் கட்ட இங்கே க்ளிக் செய்யவும்

ஜன் பகிதரி

உணவு மற்றும் நுகர் பொருள் விநியோகம்

கிராம/ரேசன் கடைகள் வாரியாக குடும்ப அட்டைகள் வைத்திருப்போரின் விபரங்கள் மற்றும் குடும்ப அட்டையின் பிரிவு (சிவப்பு/மஞ்சள் காவி/வெள்ளை )குறித்த விபரங்கள்

ரேசன் கடைகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் குறித்த விபரங்கள்

மாவட்ட வாரியாக செய்யப்பட்ட நெல் கொள்முதல் மற்றும் அதனால் பயனடைந்த விவசாயிகளின் பெயர் உள்ளிட்ட தகவல்கள்

குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்தல்

உணவு மற்றும் நுகர் பொருள் விநியோகம் & நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட குறைகள்/பிரச்சனைகளைப் பதிவு செய்தல்

ஆன்லைனில் வாக்காளர் பட்டியல்

பெயர்/முகவரிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் தேடுதல்.

தேர்தல் ஆணையம் தொடர்பான விண்ணப்பங்களைப் பெறுதல்.

மாவட்ட வாரியான தொகுதி மறு சீரமைப்பு மற்றும் தொகுதிக்கு உட்பட்ட எல்லைகளின் வரைபடம்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட இங்கே க்ளிக் செய்யவும்

சாய்ஸ்

சட்டிஸ்கர் மாநில குடிமக்கள் மேம்பாட்டிற்கான ஆன்லைன் தகவல்கள்

ஆன்லைன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு விபரங்களைப் பதிவு செய்தல்.

விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுதல்.

மின் மற்றும் தொலைபேசி கட்டணங்களைக் கட்டுதல்

அனைத்து தேவைகளுக்குமான குடியுரிமை சேவைகள் தொடர்பான விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் விண்ணப்பித்தல்.