மெக்வாட்

இணையதளம் மூலம் வாட் வரி விண்ணப்பம்
கிடைக்கும் சேவகைள்

விற்பனையாளர் தேடுதல்கள்

பொருட்கள் தேடுதல்

போக்குவரத்து-அனுமதி, சோதனை சாவடி குறித்த கேள்விகள்

எடைப்பட்டியல், தாக்கீது ரசீது பற்றிய விபரங்கள்

விநியோகப்பாளர் பதிவு

இணைய வழி வேளாண் பொருள் விலை விபரம்

கிடைக்கும் சேவைகள்:

தினசரி விற்பனை பட்டியல் மற்றும் சரக்கு வரத்து பற்றிய அறிக்கைகள்

மாவட்ட வாரியான விற்பனை கூடங்களின் விபர பட்டியல்

விலை விபரப் போக்கு

www.megamb.gov.in என்ற இணைய தளத்தில் கூடுதல் விவரங்கள் பெறலாம்.

மாவட்ட நீதிமன்றம்: இணைய வழியில் தாக்கீதுகளும், தீர்ப்புகளும்

கிடைக்கும் சேவைகள்:
மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட தாக்கீதுகளும் அதற்கான தீர்வு ஆணைகளும்

இது குறித்து விபரம் பெற http://districtjudgeshillong.gov.in/cl.htm பார்க்கவும்

இணைய வழி வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு சரிபார்க்கும் வசதி

கிடைக்கும் சேவைகள்:

பெயரின் படி தேடுதல்கள்

வாக்காளர் பதிவு எண்படி பெயர் தேடுதல்

வீட்டு முகவரிப்படி தேடுதல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான விண்ணப்பம்

மேற்கண்ட சேவைகளுக்கு http://ceomeghalaya.nic.in/ பார்க்கவும்

இணைய வழி தொகுதி வாரியான வாக்களர் பட்டியல்

கிடைக்கும் சேவைகள்:

சட்டமன்ற தொகுதி வாரியாக, பகுதிவாரியாக ஆங்கிலத்தில் வாக்காளர் பட்டியல்

60 தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல்

இணைய வழி தேர்தல் விண்ணப்பப் படிவங்கள்

கிடைக்கும் சேவைகள்:

பொதுமக்களுக்கு பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பபடிவம் (படிவம் 6), பெயர் நீக்க விண்ணப்பபடிவம் (படிவம் 7)

பெயர் திருத்த விண்ணப்ப படிவம் (படிவம் 8)

பெயர் இடமாறுதல் விண்ணப்பப்படிவம் (படிவம் 9)

அரசியல் தலைவர்களுக்கு

மக்களவை தேர்தலில் பங்கேற்க மனு

சட்டப்பேரவை தேர்தலில் பங்கேற்க மனு

குற்றவியல் சார்ந்த அபிடவிட்

வேட்பாளர்கள் பற்றிய அறிக்கைகள்

பொதுமக்களுக்கு தேவைப்படும் படிவங்கள்

கிடைக்கும் சேவைகள்

பொதுமக்களுக்கு தேவைப்படும் கல்வி சார்ந்த சேவைக்கான விண்ணப்பப் படிவம்

வேலைவாய்ப்பு, சமூக சேவைகள், வீடு கட்டுமானம், போக்குவரத்து, மேகாலயா தேர்வாணையம், வாட்வரி, சம்மந்தமான விண்ணப்பப் படிவங்கள்.

பள்ளி தேர்ச்சி அறிக்கைகள்

கிடைக்கும் சேவைகள்

10, பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு அறிக்கைகள் (கலை, வணிகம், அறிவியல்)

மேற்கண்ட தேர்வு முடிவுகள் கைபேசி மூலம் SMS (குறுந் தகவல்களாக) பெறவும் வசதி

www.megresults.nic.in என்ற இணையதளத்தை பார்த்து விபரம் பெறலாம்.

சமூக தகவல் மையம்

கிடைக்கும் சேவைகள்

அரசாணைகள் மற்றும் தினசரி செய்திகள்

சந்தை விலைப்பட்டியல் மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள்

அவசரகால வசதிகள்: இரத்த வங்கி, தீயணைப்பு சேவை நிலையம், மருத்துவமனை இருக்கை பதிவு மற்றும் நோய்வாய் பட்டோர் பயணிக்கும் ஊர்தி (ஆம்புலன்ஸ்).