ராஜஸ்தானில் மின்னாட்சி

இ-மித்ரா

தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, மொபைல்போன் முதலிய கட்டணங்கள் செலுத்தும் வசதி.

பல்வேறு குடிமக்கள் சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள்.

ஆன்லைன் மூலம் மாநில அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த குறைகளைத் தீர்த்தல்.

ராஜ்ஸ்டாம்ப்ஸ்

பத்திரப் பதிவு முத்திரைத்தாள் துறை

ஆன்லைன் மூலம் மாவட்ட கமிட்டி அறிவித்த பதிவு கட்டணங்கள் மற்றும் நிலவரங்களை அறியலாம்.

முத்திரைத் தாள் கட்டணத்தை ஆன்லைனில் கணக்கிடலாம்.

பத்திர பதிவு துறை வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பங்கள்.

ஆவணங்களைப் பெற கட்டண விபரங்கள்.

புகார்/மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

மக்கள் சாசனத்தை ஹிந்தியில் பெறலாம்.

அவசரகாலச் சேவைகள்

மாவட்ட வாரியாக அவசரகாலச் சேவைகள் பற்றிய விவரங்கள்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு,மின்சாரம், மருத்துவமனை, காவல்துறை, இரயில்வே, தண்ணீர் உள்ளிட்ட சேவைகள் பற்றிய விவரங்கள் உள்ளன.

ஆன்லைனில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியல்

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியல் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாரியாக தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

பெயர்களை வார்டு/கிராம வாரியாகவும் பார்க்கலாம்.

கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலைப் பெற இங்கு கிளிக் செய்க.
நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலைப் பெற இங்கு கிளிக் செய்க
ஆன்லைனில் மக்கள் சாசனம்

துறை வாரியாக மக்கள் சாசனத்தை ஹிந்தியில் பெறலாம்.

மக்கள் சாசனம் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்து படிக்கும்படி உள்ளது.

சட்டங்கள் மற்றும் திட்டங்கள்

பல்வேறு விஷயங்களில் மாநில அரசின் கொள்கைகள்.

அனைத்து சட்ட, திட்டங்களும் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்யும்படி உள்ளது.

முதல்வருக்கு கேள்விகளை அனுப்புங்கள்

ஆன்லைன் மூலம் முதல்வருக்கு கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம்.

போக்குவரத்துச் சேவைகள்

வாகனப் பதிவு பற்றிய விவரங்கள்.

ஓட்டுநர் பயிற்சி உரிமம் மற்றும் நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.

போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளுக்கான கட்டண விபரங்கள்.

மக்கள் சாசனம் & சாலைக் குறியீடுகள் பற்றிய தகவல்கள்.

போக்குவரத்துச் சேவைகள் பற்றி மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்க.
ராஜஸ்தான் மாநில காவல்துறை

காவல்துறை விசாரணைக்காக அனுப்பட்ட பாஸ்போர்ட் & ஆயுத உரிம விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரம்.

விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரத்தை மாவட்ட வாரியாகப் பெறலாம்.

ஆன்லைனில் வாக்காளர் பட்டியல்

ஆன்லைனில் மாவட்ட வாரியான வாக்காளர் பட்டியல்

வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளர் பெயரை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலைப் பெறலாம்.

ஆன்லைனில் அரசாங்க டென்டர் விபரங்கள்

துறைவாரியாக அரசு டெண்டர் அறிவிப்புகள் மற்றும் திட்ட அறிக்கைகள் குறித்த மனுக்கள் பற்றிய விபரங்கள்.

அனைத்து டெண்டர் அறிவிப்புகளும் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்யும்படி உள்ளது.

பொதுமக்கள் சேவை மையம்

பொதுமக்கள் சேவை மையம் குறித்த திட்ட மதிப்பீடுகள்

பொதுமக்கள் சேவை மையங்கள் உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள்.

இணையதள பட்டியல் (தொகுப்பகம்)

மாநில அரசின் அனைத்து முக்கிய அமைப்புகள் பற்றி ஓரிடத்தில் அறியலாம்.

மாநில அரசு துறைகள், ராஜஸ்தானில் இயங்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், மாவட்டங்கள் வாரியாக தொகுப்பகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மூலம் : ராஜஸ்தான் மாநில அரசு இணைய தளம்