இ-ருபி என்ற தனி நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான மின்னணு பண பரிவர்த்தனை முறை பற்றிய தகவல்கள். இ-ருபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் நேரடித் தொடர்பில்லா நடைமுறையாகும். டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை இல்லாமல், டிஜிட்டல் முறையில் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேக்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு முறையில் இதில் பணம் செலுத்த முடியும். இதை நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய பண பரிவர்த்தனைக் கழகமான என்.பி.சி.ஐ உருவாக்கியுள்ளது. சேவை வழங்குபவர்கள் மற்றும் சேவை பெறுபவர்கள் இடையே எளிமையான முறையில் பண பரிவர்த்தனை நடைபெற இ-ருபி பயன்படும் என அரசு தெரிவித்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் எந்தவொரு சிக்கலும் இன்றி நேரடியாக மக்களுக்கே சென்று சேர இ-ருபி உதவும் என மத்திய அரசு கூறியுள்ளது. இ-ருபி பற்றிய விரிவான தகவல்களுக்கு என்.பி.சி.ஐ இணையதளத்தை பார்க்கவும். ஆதாரம்: தேசிய செய்தி பிரிவு, அகில இந்திய வானொலி