ரிசர்வ் வங்கி புதிதாக இரண்டு முக்கிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது: UPI123Pay: பியூச்சர் போனை (Feature Phone) பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ123பே (UPI123Pay) எனப்படும் பட்டன் போன்களுக்கான யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) சேவை. DigiSaathi: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான பயனர்களின் சந்தேகங்களைத் தீர்க்க 24 x 7 செயல்படும் உதவி எண் சேவை. யுபிஐ123பே (UPI123Pay) தற்போது, இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட் போன்களைக் கொண்டு UPI வாயிலாக பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படுகிறது. *99# என்ற குறுகிய குறியீட்டைப் பயன்படுத்தி NUUP எனப்படும் தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட USSD தளம் (National Unified USSD Platform) மூலம் UPI சேவையைப் பெறலாம். இது எளிதான முறையாகவும் பிரபலமானதாகவும் இல்லை. சாதாரண கைபேசியை உபயோகிக்கும் 40 கோடிக்கும் அதிகமாக உள்ள மக்களுக்கு யுபிஐ123பே சேவை பயனுள்ளதாக இருக்கும். மேலும், யுபிஐ123பே சேவையைப் பெற இணைய வசதி தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். பின்வரும் நான்கு வழிகள் வாயிலாக யுபிஐ123பே சேவையைப் பெறலாம்: செயலி அடிப்படையிலான செயல்பாடு (App-based Functionality) கேளா அழைப்பு (Missed Call) ஊடாடும் குரல் பதிலளிப்பு (Interactive Voice Response) அண்மை ஒலி அடிப்படையிலான கொடுப்புகள் (Proximity Sound-based Payments) டிஜிசாதி (DigiSaathi) வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயல்படும் டிஜிசாதி (DigiSaathi) மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் கேட்டறியலாம். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தானியங்கி பதில்கள் வழங்கப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள சேவைகளில் வாயிலாக பயனர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறலாம். கட்டணமில்லா எண் (Toll-free Number) 1800-891-3333 குறுகிய குறியீடு (Short Code) 14431 வலைத்தளம் (Website) www.digisaathi.info இணைய உரையாடல் (Chatbot) ஆதாரம்: இந்திய ரிசர்வ் வங்கி