பணிகள்

இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தை நிர்வகித்தல் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்புகளை நிர்வகித்தல் மேலும் முதலீடு செய்தல் ஆகியவைகள் இத்துறையின் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். இவற்றிற்கான நடவடிக்கைகள்:

அவ்வப்போது எடுக்கப்படும் கொள்கையின் அடிப்படையில் அந்நியச் செலாவணி மாற்று விகிதம் நிர்வகிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி மற்றும் தங்கமாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை நிர்வகித்தல் மற்றும் முதலீடு செய்தல்

இந்திய அரசிற்காக வெளிநாட்டு பரிவர்த்தனை, சர்வதேச நிதி (IMF) பரிவர்த்தனைகள் ஆகியவற்றை நிர்வகித்தல், முதலீடு செய்தல்.

அந்நிய செலாவணிக்கான உத்திரவாத திட்டங்களை அமல்படுத்தல்

ஆசிய தீர்வகத்தில் இந்தியா உறுப்பினராக உள்ளதால் உருவாகும் விஷயங்கள்

தங்கக் கொள்கைகள் சார்ந்த விஷயங்கள், பன்னாட்டு தீர்வு வங்கியில் உறுப்பினராக இருத்தல் மற்றும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான வங்கியியல் நடைமுறைகள்

அந்நியச் செலாவணி மாற்று விகித நிர்வாகம்

அந்நியச் செலாவணி விகிதத்தின் அன்றாட மாற்றங்கள் சந்தையால் நிர்ணயிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணிக்கான முதன்மை நோக்கங்கள்,

அந்நியச் செலாவணி சந்தையில் ஒழுங்குமுறையை பராமரித்தல்,

தவறாமல் நிகழ்தல் (அல்லது) பிற காரணங்கள் ஆகியவற்றால் ஏற்படும் தற்காலிக “வழங்கல்-தேவை” பற்றாக்குறைகளைச் சரி செய்தல்,

மேலும் நிலையிழக்கச் செய்யும், சுய தேவைகளை நிறைவேற்றச் செய்யும் ஊகவணிக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துதல் ஆகியவையாகும்.

இந்நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ரிசர்வ் வங்கி உள்நாடு, மற்றும் வெளிநாட்டிலுள்ள நிதிசந்தைகளின் நடவடிக்கைகளை ஊன்றி கவனித்து வருகிறது. அதன் பார்வையில் தேவை எனக் கருதும் சரியான பணவியல், நிர்வாகம் சம்பந்தமானவை மற்றும் இதர நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு சந்தைச் செயல்பாடுகளை கவனத்துடன் செயல்படுத்துகிறது.

கையிருப்பு மேலாண்மை

அன்னியச் செலாவணி, முதலீட்டுக்கான சந்தை மற்றும் பத்திரங்கள் இவைபற்றிய ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிர்வாகத்திற்கு அவசியமான கட்டமைப்புகளை ரிசர்வ் வங்கி சட்டம் 1934 வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியினுடைய கையிருப்பு கொள்கையின் ஒட்டுமொத்த நிலைப்பாடானது இடர் விருப்பமில்லா நிலையான வருவாயை நோக்கமாகக் கொண்ட ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் அணுகுமுறையின் பின்னே உள்ள முக்கிய நோக்கங்கள் பாதுகாப்பு மற்றும் எளிதில் பணமாக மாற்றவல்ல நிலை என்பதாகவே இருந்து வருகிறது. இந்த வரையறைகளுக்குள் பலன்களை செம்மைப்படுத்துதல் என்பதே திறம்வாய்ந்த செயல் முறைத் திட்டங்களை வகுப்பதை வலியுறுத்துவதாய் அமைகிறது.

நடப்பு முக்கியத்துவம்

முழுவதும் கணினி மயமான சூழலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்துறை, அமைப்புக்களை மேலும் செயலில் தற்போது ஈடுபட்டுள்ளது.

குறித்த வருவாய் பகுப்பாய்விலும் இத்துறை உள்ளக ஆய்வுத் திறன்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி