பணிகள்

ரிசர்வ் வங்கிச் சட்டத்தின்படி உள்ள அதிகாரத்தின்கீழ் ரிசர்வ் வங்கி, பொதுக்கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளில் புதிய கடன்களை வெளியிடுதல் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணம் மற்றும் பணமாக்க வைக்கும் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்கிறது மற்றும் வழிவகை செலவுக் கடன்களை நிர்வகிக்கிறது.

உள்நாட்டுக் கடன்களை இத்துறை நிர்வகிக்கிறது. அவ்வப்போது அரசுக்கடன் ஏலங்கள் நடத்துவது, புதிய பத்திரங்களை கொணர்வது, கடன்முதிர் அமைப்பை தடங்கலில்லா முறையில் ஏற்படுத்துவது, சந்தை விகிதப்படி கடன்களை வைப்பது இரண்டாம்நிலை சந்தையை ஏற்படுத்தி அரசு பத்திரங்களுக்கு பணமாக்கும் திறனை மேம்படுத்தல் ஆகியவை இதிலடங்கும், பணவியல் கொள்கையை நிர்வகிக்க எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போது பணமாக வைக்கும் செயலை நிறைவேற்றுகிறது. திறந்த நிலை சந்தை செயல்பாடுகள் பத்திரங்களை வாங்குதல் விற்றல் (திரும்ப விற்றல் வாங்கல் என்ற அடிப்படையில) (Repo, Reverse Repo) போன்ற பல பத்திரங்கள் மூலமாக இவைகளை செய்கிறது.

நடப்பு முக்கியத்துவம்

பங்கு சந்தையில் உயர்காப்பு பத்திரங்களை வணிகம் செய்தல் உட்பட அரசு பத்திரங்களில் சில்லறை வணிகம் செய்தல்

அரசு பத்திர பரிவர்த்தனைகளின் வணிகம் மற்றும் தீர்வு செய்வதற்கான தொழில் நுட்பத்தை மேம்படுத்தல்

தீர்வு நிறுவனம் ஏற்படுத்துவது உட்பட தற்போதுள்ள பொதுக்கடன் சட்டத்திற்கு பதிலாக புதிய அரசு பத்திரச் சட்டத்தை அறிமுகம் செய்தல்

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி