ரிசர்வ் வங்கியின் துறைகள் / அலுவலகங்கள் / சார்பு நிறுவனங்கள் ஆகியன குறிப்பிடும் பல விஷயங்களின்மீது சட்ட ரீதியான அறிவுரைகளைத் தருவது இத்துறையின் முக்கிய பணியாகும். இத்தகைய குறிப்பிடல்கள் பெரும்பாலும் இந்திய அரசியல் சட்டம் / ஆட்சிமுறை சார்ந்த சட்டம், ரிசர்வ் வங்கிச் சட்டம், வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் (வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தும்), அந்நியச் செலாவணிச் சட்டம், அரசுப் பத்திரச் சட்டம் மற்றும் வேறுபல மத்திய / மாநில சட்டங்களை கருத்து விளக்கம் கோருபவை ஆகும். ரிசர்வ் வங்கி பணியாளர்கள் குறித்த விதிமுறைகள் ஒழுங்குமுறைகள் பற்றியும் தொழில் உறவு குறித்த சட்ட விஷயங்களிலும் கருத்து விளக்கமளிக்கவும் கடமைப்பட்டுள்ளன.

சட்டவடிவமைத்தல் அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்து, விதிகள், ஒழுங்குமுறைகள் போன்ற இரண்டாம் படியான சட்டங்கள், வங்கித்தொழில் சார்ந்த சட்டங்களின் கீழ் செய்யப்படும் சட்ட அறிவிப்புகள் அல்லது கட்டளைகள் ஆகியவையும் இத்துறைக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி தொடுக்கும் அல்லது அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விவகாரங்களில் இத்துறை, ரிசர்வ் வங்கியின் வழக்கறிஞருக்கு தகவல் அளித்தல், ரிசர்வ் வங்கியின் வழக்கறிஞருக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடைப்பட்டவராக செயல்படுதல் எனவும் பணி செய்கிறது.

வங்கிக்காக இருப்பிடச் சொத்தினை வாங்குவதில் வங்கியின் வழக்கறிஞர் மூலம் சொத்தின் உரிமைப் பத்திரம் பற்றி ஆய்வு செய்தல், கட்டிடம் கட்டுவதற்கான ஆவணங்களை கையாளுதல் ஆகிய பணிகளையும் செய்கிறது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி