பணிகள்

வருடாந்திர, பணவியல் மற்றும் கடன் கொள்கைகளை வகுத்தல், கண்காணித்தல், அமல்படுத்தல் ஆகியவை இத்துறையின் முக்கிய நோக்கமாகும். பணவியல் கொள்கை மற்றும் பணவியல் மேலான்மையை முக்கியப்படுத்துவதுடன், அதன் செயல்படும் பங்கை உயர்த்தும் நோக்கில், பொருளாதாரத்தில் ஏற்படும் முன்னேற்றத்தின் சூழ்நிலைக்கேற்ப, துறையின் கொள்கைப்பணிகள் இடைவிடாமல் படிப்படியாக தோற்றுவிக்கப்படுகிறது. இத்துறை தற்சமயம் சந்தை நுண்ணறிவு / பகுப்பாயவு கொள்கை மதிப்பீடு மற்றும் அவை பற்றிய நுட்ப ஆய்வு இவைகளை பெரிய அளவில் முக்கியப்படுத்துகிறது.

பணவியல் செயல்முறை திட்டம் மற்றும் பணவியல் நிதிநிலை அறிக்கையை தயார் செய்தல்.

வட்டி வீதத்தை உள்ளடக்கிய, வங்கியின் மொத்த மற்றும் முக்கிய பண இடப்பெயர்ச்சியை கண்காணித்தல்.

பணவியல் மற்றும் கடன்கள் முன்னேற்றத்தை, குறித்த கால இடைவெளியில் மறுபார்வை செய்தல்.

பண ரொக்க இருப்பு விகிதம் [CRR] மற்றும் சட்டபூர்வ பணமாக வைக்கும் விகிதம் [SLR] இவற்றை அட்டவணை வணிக வங்கிகள், சரியாக வைத்திருப்பதை கண்காணிப்பு மற்றும் மறுபார்வை செய்தல்.

மறுநிதியளிப்பு எல்லை, அட்டவணை வணிக வங்கிகளுக்கு பயன்பாடு இவை குறித்து, ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு செய்தல்.

பணச்சந்தையின் முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை [DATA] சேகரித்தல், கொடுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்

குறிப்பிட்ட, அனைத்திந்திய நிதியியல் நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களின் தகவல்களை [DATA] சேகரித்தல், கொடுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்.

வங்கிகளின் நிதி ஆதார மேலாண்மை திட்டங்களை பகுத்தல் மற்றும் விவாதித்தல்.

அடிக்கடி மாறும் விளைபொருட்களுக்கான, விலை மற்றும் கடன் வழங்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மறு பார்வை செய்தல்

நடப்பு முக்கியத்துவம்

இத்துறை தற்போது, வலுவான குறைந்த கால செயல் மாதிரியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த செயல் மாதிரி நிதியியல் துறைகளின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையேயுள்ள நடைமுறை உறவுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுகிறது. எதற்காகவென்றால் நோக்கத்தை அடைய, பெரிய அளவில் நிதியியல் ஒருமைப்பாடை அடையும் போது மற்றும் பணவியல் கொள்கையின் பரவி செயல்படுதலை புரிந்து கொள்வதற்காக.

சர்வதேச நிதியியல் முறைகளும் விதிகளும் குறித்த நிலைக்குழுவிற்கு செயல் அலுவலகமாகவும் உள்ளது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி