முக்கியப் பணிகள்

இத்துறை சட்டபூர்வ பணியாகிய, ரூபாய் நோட்டுகள், நாணயம் வழங்கல், மற்றும் பண நிர்வாகம் இவற்றை கவனித்துக்கொள்கிறது. அதோடு புதிய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இவற்றின் தேவைகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு, நான்கு அச்சகங்களுக்கும் (Press) நாணயகூடங்களுக்கும், தேவைகளை வழங்குமாறு விண்ணப்பம் செய்கிறது. அந்த விண்ணப்பங்களின் பேரில் பெறப்படும் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இவற்றை 18 பணம் வழங்கல் அலுவலகங்கள், 1 துணை அலுவலகம், 1 பணக்கருவூலம் மற்றும் விரிவான முறையில் இணைக்கப்பட்ட பணக்கருவூலங்கள் (2005 – ஜூன் 30 வரை 4435), சிறிய கருவூலங்கள் (repositories) மற்றும் சிறு நாணய கிடங்குகள் (Small Coin depots) ஆகியவற்றிற்கு வினியோகம் செய்கிறது.

மேலும் இத்துறை புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மற்றும் கருவூலங்களின் இருப்பில் உள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றின் கணக்கையும் பராமரிக்கிறது.

ஒரு பணக்கருவூலம் என்பது, பணம் வழங்கல் துறையின் நீட்டிக்கப்பட்ட கிளையாக இருக்கிறது. இதை வணிக வங்கிகளோடு சேர்ந்து நிர்வகிக்கிறது, இதில் புதிய மற்றும் திரும்ப புழங்கும் நிலையில் உள்ள ரூபாய் நோட்டுகளை சேமித்து வைக்கிறது. இதிலிருந்து வணிக வங்கிகள் தங்கள் தேவைக்கேற்ப பணத்தை திரும்ப எடுக்கவோ, மற்றும் அதிகப்படியான பணத்தை முதலீடு வைக்கவோ, பணம் வழங்கல் துறை அனுமதிக்கிறது.

ஒரு சிறிய கருவூலம் (repository) என்பது, பணக்கருவூலத்தின் (Currency Chest) நீட்டிக்கப்பட்ட கிளையாக இருக்கிறது. ஒன்று அல்லது பல உள்ளூர் கிளைகளில் பணக்கருவூலத்திலுள்ள பணத்தின் ஒரு பங்கை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள அழுக்கு ரூபாய் நோட்டுகளும் பணக்கருவூலத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.

இத்துறை இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகளை திரும்ப வழங்கும் விதிமுறைகளை (Note Refund Rules) நிர்வகிக்கிறது. இந்த விதிகளுக்குட்பட்டு கிழிந்த மற்றும் பழுதடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும். புழக்கத்தில் விடுவதற்கு தகுதியில்லாத பழுதடைந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

ரூபாய் நோட்டுகளில் கூட்டிணைவுக்காக (incorporation) இத்துறை அவ்வப்போது ரூபாய் நோட்டுகளின் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை மறுபரிசீலனை செய்கிறது.

இத்துறை, ரூபாய் நோட்டுகளில் மெய்த்தன்மையை பலப்படுத்துவதற்கு தேவைப்படும் வழிவகைகளை தீர்மானிக்க, கண்டுபிடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் அம்சங்களை ஆராய்ந்து, பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்துகிறது.

இத்துறை பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்டின் (BRBNMPL) ஒன்றிணைக்கும் துறையாகவும் செயல்படுகிறது.

நடப்பு விஷயங்கள்

இத்துறை போதுமான அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் தன் நோக்கத்தை தீவிரமாக பின் பற்றுகிறது. இத்துறை ரூபாய் நோட்டுகள் பரிசீலனை மற்றும் அழித்தலில் வட்டார அலுவலகங்களின் திறனை மேம்படுத்த ரூபாய் நோட்டுகள் சரிபார்த்தல் மற்றும் வகைபடுத்தல் (CVPS) எந்திரங்களை, தேவைக்கேற்ப நிறுவுகிறது. ரூபாய் நோட்டுகளின் அச்சுச்செலவை குறைக்கும் / கட்டுப்படுத்தும் நோக்கில், புழக்கத்தில் விடும் ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலத்தை அதிகரிக்கும் வழிமுறைகளையும் கவனிக்கிறது.

அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாகவும், பழுதடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்று மதிப்பை வழங்குவதிலும், வாடிக்கையாளர் சேவையை மேம்படச் செய்கிறது.

பணம் வழங்கல் அலுவலகங்களின் பட்டியல்

அஹமதாபாத், பெங்களூரு,

பேலாப்பூர் (நேவி மும்பை),

போபால்,

புவனேஷவர்,

சண்டிகர்,

சென்னை,

குவகாத்தி,

ஹைதராபத்,

ஜெய்பூர்,

ஜம்மு,

கான்பூர்,

கொல்கத்தா,

மும்பை,

நாக்பூர்,

புதுதில்லி,

பாட்னா மற்றும்

திருவனந்தபுரம்.

துணை அலுவலகம் மற்றும் பணக்கருவூலம், முறையே லக்னோ மற்றும் கொச்சியில் அமைந்துள்ளது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி