சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving Permit (IDP)) இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் மற்றும் இந்தியாவில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். ஒருவர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளாரா என்பதையும், வெளிநாட்டில் வாகனம் ஓட்ட அங்கீகரிக்கப்பட்டுள்ளாரா என்பதையும் சரிபார்க்கவும் இது உதவுகிறது. வெளிநாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள வசதியாக இந்த உரிமம் பல்வேறு மொழிகளிலும் கிடைக்கிறது. விண்ணப்பிக்கும் முறை இந்த உரிமத்தைப் பெற ஒருவர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதோடு, அவர்கள் வசிக்கும் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பம் படிவம் 4A இல் விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அனுமதி ஒரு வருடம் மட்டுமே செல்லுபடியாகும், மீண்டும் புதுப்பிக்க இயலாது. ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிப்பது அவசியம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரர் வைத்திருக்கும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் அதன் பிரதிகள். சரிபார்ப்புக்காக பாஸ்போர்ட், விசா (பொருந்தினால்) மற்றும் விமான டிக்கெட்டின் நகல்கள். பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்கள். மேலும் விவரங்களுக்கு பரிவாகன் வலைதளத்தை பார்க்கவும் நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் [International Driving Permit (IDP)] அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) ஆகஸ்ட் 26, 2022 அன்று வெளியிட்டது. இந்தத் திருத்தத்தின் காரணமாக, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி (Geneva Convention), நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமத்துடன், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதற்கு க்யுஆர் கோடு (QR Code) விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த அரசிதழ் அறிவிக்கையைக் (Gazette Notification) காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்க்கவும்:https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/aug/doc202282997201.pdf ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்