இரும்பு அல்லாத உலோக மறுசுழற்சி சூழல்சார் அமைப்பை வலுப்படுத்த சுரங்க அமைச்சகம் ஒரு பங்குதாரர்கள் போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சி இந்தியாவில் ஒரு கட்டமைக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் நிலையான மறுசுழற்சி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பின்னணி தேசிய இரும்பு அல்லாத உலோகக் கழிவுகள் மறுசுழற்சி கட்டமைப்பை தொடர்பான வழிகாட்டுதல்களின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கவும் தரவுகளை வெளிப்படுத்துவதை மேம்படுத்தவும் அலுமினியம், தாமிரம், ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட முக்கியமான உலோகங்களை மறுசுழற்சி செய்வதில் ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்ட்டலின் முக்கிய அம்சங்கள் இந்த போர்டல் தகவல் பரப்புதல், விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் மறுசுழற்சி செய்பவர்கள், கழிவுகளை அகற்றுபவர்கள், திரட்டுபவர்கள், தொழில் சங்கங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஈடுபடுவதற்கான ஒரு தேசிய மையமாக செயல்படும். இந்த இணையதளம் மறுசுழற்சி தொடர்பான வழிகாட்டுதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த துறை சார்ந்த அனைத்து தரப்பினரும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், அவர்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைக்கவும், இரும்பு அல்லாத உலோகத் துறையின் முழுத் திறனையும் வெளிப்படுத்தவும் உதவும். ஒருங்கிணைந்த போர்டல் மூலம், தொழில்துறை பங்கேற்பாளர்களைப் பதிவுசெய்தல் மற்றும் மூலப்பொருள் நுகர்வு, மறுசுழற்சி திறன், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் பணியாளர் மாற்றங்கள் குறித்த முக்கியமான தரவுகளைச் சேகரிப்பதை செயல்படுத்துகிறது. இத்தகைய தரவுகள், எதிர்கால ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் உதவும். முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: கழிவுகளை அகற்றுபவர்கள், மறுசுழற்சி செய்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் சேகரிப்பு மையங்களுக்கான தேசிய பதிவேடு. மூலப்பொருள் நகர்வு, தயாரிப்பு வகைகள், தொழில்நுட்ப ஏற்பு மற்றும் பணியாளர் தரவு ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கான கருவிகள். செயல்திறன் தரப்படுத்தல் வழிமுறைகள் பகுதி வாரியாகவும், துறை சார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் திறன் இடைவெளிகளைக் கண்டறிதல் தரநிலைகள், சான்றிதழ் அமைப்புகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேம்படுத்துவதற்கான ஆதரவு. இந்த போர்ட்டலை https://nfmrecycling.jnarddc.gov.in/ இல் அணுகலாம்.