மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆன்லைன் பயிற்சித் திட்டம் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் உருவாக்கியுள்ள மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆன்லைன் பயிற்சித் திட்டம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தால் சனவரி 21, 2026 அன்று தொடங்கப்பட்டது. சுமார் 50,000 மருத்துவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவ சிகிச்சைப் பயிற்சி, நோய் கண்டறிதல், சிகிச்சைக் குறித்த முடிவெடுத்தல், ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வி ஆகியவற்றில் அதன் நடைமுறை பயன்பாடுகள் குறித்த அடிப்படை புரிந்துணர்வை அளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி மருத்துவ நிபுணர்களிடையே டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதையும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உபகரணங்களை சுகாதாரச் சேவை மற்றும் கல்வி பயிற்சிகளில் திறம்பட ஒருங்கிணைக்க பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216908®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்