உதவும் நல்வாழ்வுத் தொழில் நுட்பங்களுக்கான தேசிய மையம் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் [Indian Institute of Technology Madras (IIT Madras)], உதவும் நல்வாழ்வுத் தொழில்நுட்பங்களுக்கான தேசிய மையத்தைத் [National Center for Assistive Health Technologies, IIT Madras (NCAHT-IITM)] தொடங்கியுள்ளது. உதவும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் [Indian Council for Medical Research (ICMR)] முன்முயற்சியாக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. உதவும் தொழில்நுட்பங்கள் என்பது மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது மூப்பால் பாதிக்கப்பட்டோருக்கான சாதனங்களைக் குறிக்கும். மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையம் [TTK Center for Rehabilitation Research and Device Development (R2D2)] இதனை செயல்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. உதவும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை நிகழ்த்திக் காட்டும் மையமாக NCAHT-IITM செயல்படும். தொழில்நுட்பத்தின் சாத்தியக் கூறுகளை வெளிப்படுத்துதல், பொறியாளர்கள்/ உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்குவோர், கொள்கை வகுப்போர், பொதுமக்கள் ஆகியோரின் எண்ணங்களில் ஏற்படும் வேறுபாடுகளைக் குறைத்தல், சிறந்த உதவும் தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளை வகுத்தல் ஆகியவற்றுக்கு இம்மையம் வழிவகுக்கும். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவின் '10எக்ஸ் உதவும் தொழில்நுட்பத் திட்டத்'துடன் [IIT Madras Research Park’s ‘10X Assistive Technology Program’] இணைந்து NCAHT-IITM மையம் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட சமூக உள்ளடக்கத்தை இம்மையம் அதிகரிக்கச் செய்கிறது. பயனர்கள், கொள்கை வகுப்போர், மறுவாழ்வுத் துறையினர், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரிடையே உதவி சாதனங்களின் மாற்றும் ஆற்றலை வலுப்படுத்தும் அனுபவக் களமாகவும் இந்த மையம் செயல்படும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கைச் சவால்களை பல்வேறு அனுபவ நிகழ்வுகள் மூலம் NCAHT-IITM எடுத்துரைக்கும். பயனர்களுக்கான வடிவமைப்புகளை உருவாக்கும் மையம், சக்கர நாற்காலித் திறன் ஆய்வகம், திறந்தவெளி கண்டுபிடிப்பு இணையதளம், கொள்கை ஆராய்ச்சிக் குழு, தகவல் பரப்பு மையம் ஆகியவற்றில் கூடுதலாக கவனம் செலுத்தப்படும். இவையனைத்தும், ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாட்டு முயற்சிகளை முழுமையாக்கக் கூடிய R2D2 மையத்தின் 'உதவும் தொழில்நுட்ப' சூழலை மேம்படுத்தும். பயன்பாட்டிற்கு உருவாக்குவோர், பயன்பாட்டிற்கு கொள்கை வகுப்போர் இடையே ஒரு தளமாக NCAHT-IITM செயல்படும். அதே நேரத்தில் உதவும் தொழில்நுட்பம், மறுவாழ்வு வல்லுநர்கள், தன்னார்வ நிறுவனங்களுக்கு பயிற்சிக் களமாகவும் இயங்கும். முதன்மையான இயக்கக் குறைபாடுகள் மீது NCAHT-IITM கவனம் செலுத்தும். இதர குறைபாடுகள் குறித்து ஐஐடி டெல்லி, எய்ம்ஸ் டெல்லி, NISH திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள NCAHT மையங்கள் கவனம் செலுத்தும். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையம் (R2D2), மனித நடமாட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளிலும், இயக்கக் குறைபாடு உள்ளவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் உதவும் சாதனங்களின் வடிவமைப்பிலும், மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது. R2D2 பொறியாளர்கள் இந்தியாவில் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் மறுவாழ்வுத் தேவைகளுக்கான மலிவு விலைத் தயாரிப்புகள், மருத்துவ நிபுணர்கள், தன்னார்வ நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். வடிவமைப்புகளை களபரிசோதனை செய்து, உயிரியக்கவியல் மற்றும் செயல்பாட்டு நிலையில் இருந்து 'உதவும் சாதன' வடிவமைப்புகளை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி சூழலை மேம்படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்