ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) உலகளாவிய எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் நோக்கில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளது. இக்கல்வி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப சுற்றுச்சூழலில் இருந்து வெளிவரும் ஸ்டார்ட்அப்களுக்கு உலகளவிலான சந்தைகள், முதலீடுகள், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி, உத்திசார் பல்கலைக்கழக ஒத்துழைப்புகள் மற்றும் தொழில் கூட்டாண்மை மூலம் முதுகலைக் கல்வி மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு இது உந்துசக்தியாக இருக்கும். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை (IIT Madras Research Foundation) என்பது ஐஐடி மெட்ராஸ்-ன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துதல், கண்டுபிடிப்பு- தொழில்முனைவு ஆகியவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்துதல், தொழில்- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மைகளின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தல் போன்ற நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள் காப்புரிமைகள், தொழில்நுட்பங்களை வணிகப்படுத்த தயார் நிலையில் வைத்திருத்தல். ஐஐடி மெட்ராஸ் ஆசிரிய நிறுவனர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்ட ஸ்டார்ட்அப்கள். சந்தை ஆய்வுகள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் (உதாரணமாக பசுமை வளர்ச்சி). ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழலில் இருந்து ஸ்டார்ட்அப்களுக்கு உலகளாவிய அணுகுமுறையை ஏற்படுத்துதல், புதிய சந்தைகள், மூலதனம், தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துதல். முன்னாள் மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய தொழில்நுட்பங்களை கிடைக்கச் செய்தல். உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் தொழில் கூட்டு முயற்சியின் மூலம் சர்வதேச கல்வித் திட்டங்களை செயல்படுத்துதல். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்