மெய்நிகர் உண்மை அடிப்படையிலான கல்வி மாதிரி சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (IIT Madras) ஆராய்ச்சியாளர்கள், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஏஆர்/விஆர் எனப்படும் ஆக்மென்டட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி [Augmented Reality/Virtual Reality (AR/VR)] அடிப்படையிலான கற்றலை உருவாக்கி வருகின்றனர். நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்பித்தல்-கற்றல் மாதிரிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சமூக அறிவியல், வரலாறு, அறிவியல், மொழிகள் போன்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறும் வகையில் மெய்நிகர் உண்மை (Virtual Reality) முறையில் ஆழ்ந்த மற்றும் அனுபவக் கற்றல் சூழலை உருவாக்குவது இந்த முன்முயற்சியின் இலக்கு ஆகும். ஆக்மெண்டட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி (Augmented Reality/Virtual Reality) உலகை உருவாக்குதல், டிஜிட்டல் முறையிலான கதை சொல்லுதல், விளையாட்டுகள் ஆகியவற்றால் கற்றல் செயல்முறை மேலும் வலுப்பெறும். அத்துடன், மாணவர்கள் உயர்கல்வி என்ற போட்டி மிகுந்த களத்திற்கு தங்களைத் தயார் செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும். ஏஆர்/விஆர் (AR/VR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பித்தல் கருவிகளை உருவாக்கி, கையடக்கத் தளங்கள் மூலம் மெய்நிகர் அணுகல் மற்றும் இயக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் இத்திட்டம் கல்விப் புரட்சிக்கு வழிகோலும். அத்துடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே இருந்து வரும் டிஜிட்டல் இடைவெளியைக் (Digital Divide) குறைக்கும். வகுப்பறைகளில் ஏற்படும் கற்றல் குறைபாடுகளைக் களைந்து, குறைந்த செலவில் எளிதில் அணுக ஏதுவாக, ஆழ்ந்த கற்றல் அனுபவங்களை உருவாக்க முயலும் இத்திட்டம் பல்வேறு துறைகளில் பணிபுரியும் நிபுணர்களை இணைக்கும். ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கு "அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்யவும், அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கவும்" அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கு #4 (UN Sustainable Development Goal #4) அடைய இந்தியாவுக்கு இந்தத் திட்டம் உதவும். பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி தொழில்துறையில் இருந்து பெறப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியானது [Corporate Social Responsibility (CSR)] இத்திட்டத்தை நாட்டிற்கு பெருமளவு பயனளிக்கும் வகையில் உயர்த்த உதவும். மெமரிபைட்ஸ் செயலி இதன் தொடக்கமாக, ஆக்மெண்டட் ரியாலிட்டி அடிப்படையில் மெமரிபைட்ஸ் (MemoryBytes) எனப்படும் முதல் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர். 500 ஆண்டுகளில் நாடு கடந்த ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வரலாற்றை இது படம்பிடிக்கும். ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய பதிப்புகளில் பயன்படுத்தக் கூடிய இந்த மொபைல் செயலி, புகைப்படங்கள், வரைபடங்கள், காப்பக ஆவணங்களின் அனிமேஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவங்களை அளிக்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.iitm.ac.in/happenings/press-releases-and-coverages/iit-madras-researchers-developing-virtual-reality-based இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்