தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமும் [Tamil Nadu Industrial Development Corporation (TIDCO)] பிரான்ஸ் நாட்டின் டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனமும் (Dassault Systèmes) உருவாக்கியுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் [Tamil Nadu Centre of Excellence for Advanced Manufacturing (TANCAM)] சிறு குறு தொழில் நிறுவனங்களின் மேம்பட்ட உற்பத்திக்கான உயர் தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. மேலும், TANCAM மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கவும் மற்றும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் இந்த நிறுவனம் உதவுகிறது. தமிழ் நாடு முதலமைச்சரின் கனவுத்திட்டமான “நான் முதல்வன்” திட்டத்திலும் இந்நிறுவனம் முக்கிய பங்களிப்பைச் செய்து வருகிறது. TANCAM பற்றிய மேலும் தகவல்களுக்கு www.tancam.in வலைத்தளத்தைப் பார்க்கவும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9