நாசித்துவாரத்தின் (Intranasal) வழியாக செலுத்தக்கூடிய உலகின் முதல் கொரோனா தடுப்பூசி iNNCOVACC மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் (Ministry of Science and Technology) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நாசித்துளைகளில் செலுத்தக்கூடிய 2ஆம் கட்ட டோஸாகவும், பன்முக பூஸ்டர் டோஸாகவும் அனுமதி பெறும் முதல் தடுப்பூசி ஆகும். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் உயிரி-தொழில்நுட்பத்தின் கீழ், உயிரி தொழில்நுட்ப தொழிலக ஆராய்ச்சி உதவி அமைப்பான Biotechnology Industry Research Assistance (BIRAC) மற்றும் பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் (BBIL) கூட்டுமுயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்