ஆசிரியர்களுக்கான குறிப்புகள் உயர்கல்வியில் உள்ள பல்வேறு படிப்புகள், அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எப்படித் திரட்டுவது என்பது பற்றி ஆசிரியர்களுக்குத் தெரிந்திருத்தல் அவசியம். உயர்கல்விக்கான விவரங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிலும் 'நான் முதல்வன்' இணையதளத்திலும் பார்த்து தகவல்களை எப்படித் தெரிந்துகொள்வது என்பதைக் கற்றுத் தர வேண்டும். மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு குறித்து ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வரும் அறிவிப்புகள் குறித்து மாணவர்களுக்குத் தெரிவித்து, விரும்பும் மாணவர்களை விண்ணப்பிக்கச் செய்ய வேண்டும். நுழைவுத்தேர்வை எதிர்கொள்வது பற்றி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அரசு, தனியார் துறை, அறநிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகை குறித்த விவரங்களை மாணவர்களுடன் பகிர வேண்டும். ஒவ்வொரு படிப்பும் அதனளவில் சிறந்தது. எந்தப் படிப்பை எடுத்துப் படித்தாலும் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை அனைத்து மாணவர்களுக்கும் உணர்த்தி உற்சாகப்படுத்த வேண்டும். ஆதாரம்: நான் முதல்வன்