செயல்தாள் 1 - தெரிந்து கொள்வோமா! நமது தமிழ்நாட்டில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள் பற்றி அறிந்து கொள்வோமா! செய்முறை கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் உள்ள பல்கலைக்கழகங்களைக் குறிக்கும் புகைப்படங்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும். அது எந்தப் பல்கலைக்கழகத்தைக் குறிக்கிறதோ அதற்கு நேர் எதிரே ஒட்ட வேண்டும். பின்பு அந்தப் பல்கலைக்கழகம் குறித்த சிறு தகவல்களைச் சேகரித்து, அதனைப் பற்றிய சிறு குறிப்புகளாக அட்டவணையில் எழுதவேண்டும். செயல்முறை அட்டவணை வ.எண் தமிழகப் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் பல்கலைக்கழகப் புகைப்படங்கள் சிறு குறிப்புகள் 1 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 2 தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 3 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை 4 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கற்றதும் பெற்றதும் உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய அறிவை மாணவர்களிடம் வளர்த்தல். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பற்றி அறிந்துகொள்ளச் செய்தல். செயல்தாள் 2 - நான் விரும்பும் உயர்கல்வி! தனக்கு விருப்பமான உயர்கல்வி எது என்பதைக் கண்டறிந்து, அதற்கான தகவல்களைச் சேகரித்தல். செய்முறை விளக்கம் செயல்தாளில் உள்ள 'நான் விரும்பும் உயர்கல்வி' வட்டத்திற்குக் கீழ் உள்ள கோடிட்ட இடத்தில் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வி சார்ந்த ஒரு படிப்பினை எழுத வேண்டும். பிற கட்டங்களில் இருக்கும் தலைப்புகளுக்கு ஏற்றவாறு, நீங்கள் தேர்ந்தெடுத்த உயர்கல்விப் படிப்பிற்கான பிற விவரங்களை எழுதவேண்டும். எடுத்துக்காட்டு நான் விரும்பும் உயர்கல்வி - பொறியியல் படிப்பு உயர்கல்வி நிறுவனம் - அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பாடப்பிரிவுகள் - எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல் தகுதிகள் - பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்து இருக்க வேண்டும் தேவையான திறன்கள் - கணிதத் திறமை, பகுப்பாய்வுத் திறன்கள், செய்முறை சார்ந்த திறன் கற்றதும் பெற்றதும் தான் விரும்பும் உயர்கல்வி எது என்பது பற்றி முடிவு எடுக்கக் கற்றுக்கொடுத்தல். அந்தப் படிப்பை வழங்கும் கல்லூரிகள், எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது, அந்தப் படிப்பிற்கு தேவைப்படும் திறன்கள் மற்றும் தேவைப்படும் தகுதி போன்றவை பற்றிச் சிந்திக்கச் செய்தல். செயல்தாள் 3 - என் மாவட்டம்... என் கல்லூரி... நான் மதுரக்காரண்டா, எங்க ஊரு சிறுவாணித் தண்ணி மாதிரி வருமா? இருட்டுக் கடை அல்வான்னா அது எங்க ஊர்தான்... இப்படி நம் எல்லாருக்குமே அவர்கள் பற்றிப் பெருமைப்பட பல விஷயங்கள் இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்களை இங்கே பதிவு செய்யலாம். இவை மட்டுமா நம் பெருமை? அறிவை வளர்க்கும் நம் பகுதியைச் சார்ந்த கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கூடத்தானே நம் பெருமை. அவற்றைப் பற்றியும் விவரங்களைத் திரட்டிப் பதிவு செய்வோமா? எனது பள்ளியின் பெயர்:எனது ஊரின் பெயர்:எனது மாவட்டத்தின் பெயர்:எனது மாவட்டத்தின் பெருமைகள்:எனது மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் பெயர்கள்: 1. _______________________________2. _______________________________3. _______________________________ எனது மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் பெயர்கள் (மாவட்ட பல்கலைக்கழகம் இல்லை எனில் மாநில பல்கலைக்கழகத்தின் பெயர்களை எழுதவும்) கற்றதும் பெற்றதும் மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பற்றி அறியச் செய்தல். செயல்தாள் 4 - சிறகடித்துப் பறக்கலாம்! பள்ளிப்படிப்பை முடிக்கும் நீங்கள் உங்கள் கனவை நனவாக்கி, பட்டாம்பூச்சியாய்ப் பறக்க எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற திட்டங்களை வைத்துள்ளீர்கள்? நீங்கள் நிரப்பியுள்ள பதில்களைக் கொண்டு அவற்றைத் தெரிந்துகொள்வோமா? பள்ளிப்படிப்பில் எந்தப் பாடப்பிரிவை (Group) எடுத்துள்ளீர்கள் என்பதை முதல் பெட்டகத்தில் நிரப்பவும். உங்களது கனவு என்னவென்பதைப் பட்டாம்பூச்சியாகப் பறக்கும் பெட்டியில் நிரப்பவும். உதாரணம்: மருத்துவர், பொறியாளர், தணிக்கையாளர். என்னென்ன படிப்புகளைப் படிக்க வேண்டும்? என உங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் புத்தகம் / இணையதளம் மூலம் சேகரித்த தகவல்களை அதற்குப் பொருத்தமான பெட்டிகளில் நிரப்பவும். இப்போது உங்கள் பள்ளிப்படிப்பிலிருந்து எந்தெந்த வழிகளில் உங்கள் கனவை அடையமுடியும் என்பதை இரண்டு அல்லது இரண்டிற்கு மேலான வழிகளில் அம்புக்குறிகளால் வெவ்வேறு வண்ணக்கோடுகளின் மூலம் இணைத்துக் காட்டவும். கற்றதும் பெற்றதும் மாணவர்கள் தான் படித்துக் கொண்டிருக்கும் பாடப்பிரிவில் இருந்து அவர்களுடைய கனவான வேலையை அடைவதற்கு என்ன என்ன உயர்கல்வி படிநிலைகளைக் கடக்க வேண்டும் என்ற பாதையை உருவாக்கக் கற்றுக்கொடுத்தல். செயல்தாள் 5 - தேடல் பட்டப்படிப்புகள் (Degree Course)பட்டயப்படிப்பு (Diploma Course)சான்றிதழ் படிப்பு (Certificate Course)தொழில்முறை சார்ந்த படிப்பு (Vocational Course)தொழில்முறை சாராத படிப்பு (Non-vocational Course)ஒவ்வொரு பிரிவிலும் உங்களுக்குத் தெரிந்த இரண்டு படிப்புகளின் பெயர்களை எழுதவும். கற்றதும் பெற்றதும் மாணவர்களிடையே உயர்கல்விப் படிப்புகளில் உள்ள பிரிவுகளைத் தேடித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை உருவாக்கும். செயல்தாள் 6 - அடுத்த நிறுத்தம்: உயர்கல்வி! கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இணைய முகவரிகளிலும் உங்கள் இலக்கான உயர்கல்வியை நோக்கி பயணிக்க உதவும் கல்வி உதவித்திட்டங்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன. அவற்றை நன்கு ஆராய்ந்து உங்களுக்குப் பொருத்தமான உதவியைத் தேர்ந்தெடுத்து உங்கள் இலக்கை எளிதில் அடையலாமே? கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு அது தொடர்பாக இணையதளங்களில் இருந்து தகவல்களைத் திரட்டித் தனியே ஒரு தாளில் எழுதவும். www.aicte-pragati-saksham.gov.in"PRAGATI" கல்வி உதவித்திட்டம் ஒன்றிய அரசின் எந்தத் துறையால் வழங்கப்படுகிறது?ஆண்டுக்கு எத்தனை மாணவிகளுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது?எந்தத் தகுதியின் அடிப்படையில் இந்த உதவிக்கான மாணவர் தேர்வு நடைபெறுகிறது? www.scholarships.gov.inஇந்த இணையதளத்தில் உள்ள உதவிகளை வழங்கும் அமைச்சகங்களின் பெயர்களை எழுதுங்கள்.இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள "UGC” மற்றும் “AICTE” என்பதன் விரிவாக்கம் என்ன?மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவி என எத்தனை திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன? www.online-inspire.gov.in“INSPIRE” என்பதன் விரிவாக்கம் என்ன?இந்த இணையதளத்தில் எந்த மேற்படிப்பிற்கான உதவிகளைக் காணமுடிகிறது?எந்தத் தகுதியின் அடிப்படையில் இந்த உதவிக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? www.nhfdc.nic.inNHFDC என்பதன் விரிவாக்கம் என்ன?எந்த அரசுத் துறையால் இந்த இணையகளத்தின் கீழ் உள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன?ஓர் ஆண்டில் எத்தனை மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவி வழங்கப்படுகிறது? www.kvpy.iisc.ernet.inKVPY என்பதன் விரிவாக்கம் என்ன?இந்த உதவித்திட்டம் எந்த அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது?எதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்? கற்றதும் பெற்றதும் இந்த உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை வழங்கும் இணையதளங்களைப் பயன்படுத்தித் தகவல்களைச் சேகரிக்கப் பழகுதல். ஆதாரம்: நான் முதல்வன்