ஆசிரியர்களுக்கான குறிப்புகள் திறன்களை மேம்படுத்திக்கொள்வது பற்றி ஒருமுறை சொல்வதைக் கேட்டு மாணவர்கள், அவற்றைப் பற்றி உடனே சிந்திக்க ஆரம்பித்துவிடமாட்டார்கள். மாணவர்களிடம் தொடர்ந்து திறன்களை வளர்த்துக்கொள்வதன் அவசியம் பற்றிப் பொறுமையாக, தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். நம்மை மற்றவர் மதிப்பது நம் உடல் தோற்றத்திற்காக அல்ல; குணங்களுக்காகத்தான் என்பதை புரியவைக்க வேண்டியது மிக அவசியம். பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்ல ஆசிரியர்களின் பணி. வீட்டிற்கு அடுத்து குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவது பள்ளிகளில்தான்! அவர்களின் திறமைகளை வளர்க்க, குணநலன்களை மேம்படுத்த ஆசிரியர்கள் முழுமனதோடு, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். ஆதாரம்: நான் முதல்வன்