செயல்தாள்கள் செயல்தாள் 1 - சிறிய தகவல்! பெரிய மாற்றம்! அருண் +1 படிக்கும் மாணவன், தினமும் மாலையில் தனது வீட்டின் அருகில் உள்ள நூலகத்திற்கு / டீக்கடைக்குச் சென்று அங்கு இருக்கும் செய்தித்தாளில் உள்ள கல்வி சார்ந்த தகவல்களைத் திரட்டுகிறான். ஒரு மாதம் கழித்து அவன் திரட்டிய தகவல்களைக் கொண்டு கல்வி தொடர்பான செய்திகள் அடங்கிய ஒரு புத்தகத்தைத் தயாரிக்கிறான். பிறகு அந்தப் புத்தகத்தைத் தன் வகுப்பில் உள்ள பிற மாணவர்களிடம் பகிர்ந்துகொள்கிறான். மேற்கூறிய செயல்களின் மூலம் அருண் வளர்த்துக்கொண்ட திறன்களைக் கீழே உள்ள இடங்களில் எழுதுக. _______________________________________________________________________________ _______________________________________________________________________________ _______________________________________________________________________________ _______________________________________________________________________________ _______________________________________________________________________________ இதுபோல, நீங்கள் ஒரு வாரம் உங்கள் வீட்டின் அருகில் உள்ள நூலகம் / கடைக்குச் சென்று அங்குள்ள செய்தித்தாளில் இருக்கும் கல்வி சார்ந்த செய்திகளைத் திரட்டுங்கள். அவற்றைக் கொண்டு, ஒரு கல்விச் செய்திப் புத்தகத்தைத் தயாரியுங்கள். அது குறித்து, உங்கள் வகுப்பு மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பகிர்ந்துகொண்டவற்றை இங்கே எழுதலாமா? _________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________ கற்றதும் பெற்றதும் மாணவர்களிடையே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கி அதன் மூலம் அவர்களது மொழித்திறன், எழுதும் திறன், உரையாடும் திறன், பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் திறன் மற்றும் கவனித்தல் திறன் போன்றவற்றை வளர்க்கச் செய்தல். செயல்தாள் 2 - ஊர் சுற்றலாமா? வாருங்கள், ஊர் சுற்றலாம்! "யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் ஊர் சுற்றுவது”. போகலாமா? ஆமா, எல்லாரும்தான் ஊர் சுற்றுகிறார்கள் நாம் என்ன புதுசா செய்யப்போகிறோம்? என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்! ஆம், நாம் உருப்படியாக ஊர் சுற்றப் போகிறோம். நம் ஊரில் உள்ள தொழில் நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிடப் போகிறோம்! அந்த நிறுவனங்களின் கட்டமைப்பு, அதிலுள்ள துறைகள், அங்கு வேலை பார்ப்பவர்களின் கல்வித்தகுதி, பணி விவரங்கள் பற்றி விவரங்களைத் திரட்டுவோம். திரட்டிய செய்திகளை தொகுத்து இங்கே எழுதுவோம். நிறுவனம் 1 நிறுவனம் 2 ஊர் சுற்றலாமா செயல்பாட்டைச் செய்யும்பொழுது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் யாவை? ___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________ கற்றதும் பெற்றதும் மாணவர்கள் தங்கள் பகுதியில் / ஊரில் உள்ள நிறுவனங்கள் பற்றித் தெரிந்து கொள்ளச் செய்தல். மேலும், அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பிற்கான கல்வித்தகுதி, பணி விவரம் பற்றிய தகவல்களை அறியச் செய்தல். செயல்தாள் 3 - சந்திப்போமா? “புதுசா ஒருத்தர்கிட்ட பேசுறதுக்கு எனக்கு ரொம்ப தயக்கம்” அப்படின்னு சொல்கிறவரா நீங்க? அப்போ இது உங்களுக்காகத்தான். இல்லை நான் ரொம்ப தைரியமாகப் பேசிடுவேன் அப்படின்னு சொல்கிறவரா நீங்க? அப்போ இது உங்களுக்கும்தான்! மாதத்திற்கு மூன்று நபர்களை நீங்கள் சந்திக்க வேண்டும். ஆமா, யார் அந்த மூன்று நபர்கள் என்ற கேள்வி வருகிறதா? இதற்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: நீங்கள் சந்திக்கும் முதலாமவர்: உங்கள் பகுதியில் / ஊரில் உள்ள கல்லூரியில் படித்து முடித்து வேலை பார்த்துக்கொண்டிருப்பவர். (அவரிடம் படிப்பு, அவர் வகிக்கும் பதவி, அது குறித்த தகவல்களைத் திரட்டி நபர் 1 என்ற இடத்தில் நிரப்ப வேண்டும்.) நீங்கள் சந்திக்கும் இரண்டாமவர்: கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு அண்ணன் அல்லது அக்கா. (அவரிடம், படிக்கும் நிறுவனம், படிப்பு பற்றிய விவரங்களைக் திரட்டி நபர் 2 என்ற இடத்தில் நிரப்ப வேண்டும்.) நீங்கள் சந்திக்கும் மூன்றாமவர்: உங்கள் பகுதியில் உள்ள இஸ்திரி செய்பவர், மேசை, நாற்காலி என மரச் சாமான்கள் தயாரிப்பவர், சிறு கடை வைத்து நடத்துபவர்... இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவருக்குத் தேவைப்படும் தொழில் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர்களோடு உறவாட தேவைப்படும் திறன்கள் பற்றிக் கேட்டு நபர் 3 என்ற இடத்தில் நிரப்ப வேண்டும். கற்றதும் பெற்றதும் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசவும் கலந்து பழகவும் பேசுவதை உற்றுக்கவனிக்கவும் உரையாடி கருத்துகளைப் பெறவும் அதைத் தொகுத்து எழுதவும் அறிந்துகொண்டேன். ஆதாரம்: நான் முதல்வன்