செயல்தாள் 1 - அச்சம் தவிர்! நாம் அனைவரும் சிறுவர்களாக இருக்கும்போது பல விஷயங்கள், மனிதர்கள், இடங்கள் எனப் பலவற்றைப் பார்த்து பயந்திருப்போம். காலப்போக்கில் அந்த பயத்திலிருந்து விடுபட்டு “அட, இதைக் கண்டா நாம் அப்படி பயந்தோம்” என்று எண்ணி நாமே சிரிக்கவும் செய்திருப்போம். அவ்வாறு உங்கள் சிறு வயதில் உங்களுக்கு எதைப் பற்றி எல்லாம் பயம் வரும் எனச் சிலவற்றைக் கீழே பட்டியலிடவும். இருட்டில் தனியாக இருக்கும்பொழுது பெரிய லாரி எதிரே வருவதைப் பார்த்தால் வீட்டுப்பாடம் முடிக்காமல் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் திட்டு வாங்குதல் கரப்பான்பூச்சியைப் பார்த்தால் _______________________________________________ _______________________________________________ _______________________________________________ _______________________________________________ _______________________________________________ _______________________________________________ தற்பொழுது நீங்கள் மேற்கூறிய எல்லா பயங்களிலிருந்தும் வெளிவராவிட்டாலும் அவற்றில் சிலவற்றிலிருந்தாவது வெளிவந்திருப்பீர்கள். அப்படி அந்த பயங்களிலிருந்து வெளியே வருவதற்கு என்ன முயற்சிகள் மேற்கொண்டீர்கள் அல்லது என்ன புரிதல் ஏற்பட்டு அந்த பயம் நீங்கியது என கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எழுதவும். வ.எண் பயம் முயற்சிகள் / புரிதல் 1 வேகமாக வரும் பெரிய லாரியைப் பார்க்கும்போது வரும் பயம். பெரிய வாகனங்களில் பயணம் செய்த பின்பு அல்லது தானே வாகனம் ஓட்டப் பழகிய பின்பு அதன் மேல் உள்ள பயம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. 2 3 4 தற்பொழுது நீங்கள் பள்ளிப் படிப்பில் உள்ள தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளீர்கள். தேர்வுகள் பற்றி என்ன உணர்வு உங்களுக்கு வருகிறது? அந்த உணர்வுகளிலிருந்து நீங்கள் வெளியே வருவதற்கு என்ன முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்? எனக் கீழே உள்ள அட்டவணையில் எழுதவும். வ.எண் உணர்வுகள் முயற்சிகள் 1 2 3 4 5 சிறு வயதில் உங்களை அச்சமடையச் செய்த விஷயங்களில் இருந்து விடுபட்டு, இப்போது அவற்றைச் சாதாரணமாக எதிர்கொள்ள முடிகின்றதோ, அதே மாதிரி தேர்வு குறித்த உங்கள் அச்சத்தையும் பிற உணர்வுகளையும் சிறு சிறு முயற்சிகளுடன் புரிதலுடன் எதிர்கொண்டு அவற்றில் வெற்றி அடையலாம். அச்சம் தவிர்ப்போம்! கற்றதும் பெற்றதும் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த புரிதல் இல்லாத நேரத்தில் அதைக் கண்டு பயம் வருவது இயல்பான ஒன்றுதான். அதைச் சிறு மாற்றங்கள் அல்லது புரிதல்கள் கொண்டு எளிதில் கடக்கலாம் என்ற எண்ணத்தை விதைத்தல். ஆதாரம்: நான் முதல்வன்