தமிழிணையம் - மின்னூலகம் பாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றான மின்னூலகம் தமிழ் இலக்கிய, கலாச்சார, வரலாற்றுப் பிரிதிகளைப் பாதுகாத்து உலகெங்கிலும் இருந்து அணுக வழிசெய்கிறது. மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு உதவுவதுடன், தமிழ் மொழியின் இலக்கிய வளங்கள் உலகோர் அனைவரையும் அடைவதை உறுதி செய்கிறது. ஆராய்ச்சி வளங்கள் 45,045 புத்தகங்கள் 31,258 பருவ வெளியீடுகள் 3,739 ஓலைச்சுவடிகள் 6,974 புகைப்படங்கள், 800 மணிநேர ஒலி ஒளி ஆவணங்களும் இணையத்தில் அணுகும்படி வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதாரம்: தமிழிணையம் - மின்னூலகம்