தரங்கள் வழியில் அறிவியலைக் கற்றுக்கொள்ளுதல் மாணவர்கள் தரங்கள் வழியில் அறிவியலைக் கற்றுக்கொள்வதற்கான தொடரை (Learning Science via Standards) மத்திய அரசின் தேசிய தர அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் [Bureau of Indian Standards (BIS)] தொடங்கியுள்ளது. இந்திய தரத்திற்கு தேவைப்படும் வகையில் பல்வேறு பொருட்களின் தரம், செயல்பாடு மற்றும் பரிசோதனை, உற்பத்தியில் பயிற்சி ஆகியவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் உதவுவதற்காக அறிவியல் ரீதியிலான கருத்துகள், தத்துவங்கள் மற்றும் விதிகளைப் பயன்படுத்த இந்தப் பாடமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவனம் அதிகாரிகள் உரையாடல் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளனர். இவை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தில் எந்தவொரு சூழ்நிலையையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், தரத்தை அறிந்துகொள்ளும் வகையிலும் பாடத்திட்டங்கள் இருக்கும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்