மானுடவியல் முனைவர் பட்டம் பெற உதவிய ராஜீவ் காந்தி தேசிய ஆய்வு உதவித்தொகை சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி, கல்விசார் வாய்ப்புகள் கிடைப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் ஆகியவைகள் உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளைத் தொடர்வதில் பெரும் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. சரியானத் தருணத்தில் வழங்கப்படும் உதவித் தொகை ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடரவும், ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் உயர்கல்வித் துறையில் பணிப் புரியும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகிறது. கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் ஏற்படும் மாற்றத்தை நிருபிக்கும் வகையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 35 வயதான டாக்டர் பரமானந்த நாயக் நிதி, சமூக நெருக்கடிகளை எதிர்கொண்டு ராஜீவ் காந்தி தேசிய ஆய்வு உதவித்தொகை (Rajiv Gandhi National Fellowship) பெற்று மானுடவியல் (Anthropology) படிப்பில் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். மேலும், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரிலுள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும் பணிப் புரியும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். குடும்பத்தின் வலுவான ஆதரவு, மன உறுதி ஆகியவற்றுடன் கற்பித்தல், ஆராய்ச்சி, மானுடவியல் ஆய்வு ஆகியவற்றின் மூலம் சமூகத்திற்கு பங்களிக்கும் நோக்கில் டாக்டர் நாயக் தனது ஆராய்ச்சி படிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302015®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்