அரசினர் யோகா & இயற்கை மருத்துவக் கல்லூரி & மருத்துமனை, சென்னை மற்றும் சர்வதேச யோகா & இயற்கை மருத்துவம் அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு ஆகியவற்றில் மூன்றாண்டு எம். டி. யோகா & இயற்கை மருத்துவம் பட்ட மேற்படிப்பு வழங்கப்படுகிறது. அடிப்படைத் தகுதி, நுழைவுத்தேர்வு கால அட்டவணை, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற வலைதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:செயலர், தேர்வுக்குழுஇந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம்அரும்பாக்கம், சென்னை 600 106 குறிப்பிட்ட தேதிக்குள் தபால் அல்லது கூரியர் சேவையின் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலதாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பிற்கான கட்டணம் ரூ. 3000. இக்கட்டணத்தை எஸ்.பி.ஐ. இ-சேவை எனும் இணையதள சேவையின் வாயிலாக செலுத்தி அதற்குரிய பணப்பரிமாற்ற குறியீட்டு எண்ணினை அதற்குரிய ரசீதினையும் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிப்பதன் மூலமாக உரிய விண்ணப்பக்கட்டணத்தினை செலுத்தியதாக கருதப்படும். மேலும் விவரங்களுக்கு http/www.tnhealth.tn.gov.in இணையதளத்தைப் பார்க்கவும். ஆணையர்இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9