தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2025 (TNGASA 2025) தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2024 (TNGASA 2024) என்பது பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆன்லைன் செயல்முறையாகும். தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இது ஒரு ஒருங்கிணைந்த இணைய முகப்பு ஆகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் SC/SCA/ST பிரிவினருக்கு ரூ. 2 மற்றப் பிரிவினருக்கு ரூ. 50 ஆகும். பதிவு செய்யும் முறை தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கை 2025 (TNGASA-2025) என்பது இணையவழி விண்ணப்ப பதிவு மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதாக அமையும். விண்ணப்பத்திற்கானத் தகவல்களைப் பதிவு செய்தல், விருப்பமானக் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல், பதிவு செய்வதற்கானப் பணத்தைச் செலுத்துதல், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும். கலந்தாய்வின் நடைமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பின்வரும் படிகளைக் கொண்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் UG படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் www.tngasa.in ஆகும். இது மட்டுமே அதிகாரப்பூர்வ இணையதளம். tngasa என்ற பெயரைக் கொண்ட வேறு எந்த அங்கீகரிக்கப்படாத இணையதளத்தையும் பார்க்க வேண்டாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யத் தாங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், அருகிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் Admission Facilitation Center (AFC)-2025 மூலம் இதைச் செய்யலாம். பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை விருப்பப்படி பதிவு செய்தல். தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரி வலைத்தளங்களில் வெளியிடப்படும். மூன்று தரவரிசை பட்டியல் உள்ளது அவை பின்வருமாறு: தமிழ் தரவரிசை பட்டியல்: பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் பி.ஏ. தமிழ் இலக்கியம் / பி.லிட். படிப்புகளின் சேர்க்கைக்குப் பயன்படுதப்படும். ஆங்கிலம் தரவரிசை பட்டியல்: பனிரெண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆங்கிலம் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புகளின் சேர்க்கைக்குப் பயன்படுதப்படும். பொது தரவரிசை பட்டியல்: மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் (400 மதிப்பெண்களில்) இது தயாரிக்கப்படும். இது மற்ற அனைத்து B.A. / B.Sc. / B.Com./ B.B.A. / B.C.A. / B.S.W படிப்புகளின் சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்த பாடப்பிரிவுகளின் விருப்ப வரிசையின் அடிப்படையில் தரவரிசைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு ஆணை அந்தந்த கல்லூரிகள் வழங்கும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்க பட்ட ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கையை உறுதி செய்தல். விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அனைத்து விவரங்களையும் அவை செய்யப்பட வேண்டிய நாட்களையும் உரிய நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்குமான முதற்படி, விண்ணப்பத்தைப் பதிவு செய்தல். அதை எவ்வாறு செய்வது என்பதை இந்த குறிப்பு விவரிக்கிறது. பயனாளர் பதிவு செய்தல் இப்போது நாம் விண்ணப்பம் பதிவு செய்வது எப்படி? என்று பார்க்கலாம். பதிவு செய்தலை எளிதாக்க, அது பல எளிய படிகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படிகளைக் கவனமாக தொடருங்கள். முதலாவதாக www.tngasa.in மற்றும் என்ற இணையதளத்திற்கு செல்லவும். தற்பொழுது நீங்கள் கீழே காணும் கணினி பக்கத்தைக் காண்பீர்கள். சேர்க்கை அட்டவணை விண்ணப்பம் பதிவு செய்ய துவக்க நாள் 07.05.2025 விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 27.05.2025 மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் நாள் அறிவிக்கபடும் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாட்கள்(மாற்றுத்திறனாளிகள் /விளையாட்டு வீரர்கள் / முன்னாள் ராணுவத்தினர் /தேசிய மாணவர் படை/ பாதுகாப்பு படை வீரர்கள்) அறிவிக்கபடும் முதல் பொது கலந்தாய்வு நாட்கள் அறிவிக்கபடும் இரண்டாம் பொது கலந்தாய்வு நாட்கள் அறிவிக்கபடும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் நாள் அறிவிக்கபடும் பயனுள்ள இணையதளங்கள் TNGASA கையேடு வழிமுறைகள் இணையவழி விண்ணப்பம் கல்லூரிகளின் பட்டியல் தேவையான ஆவணங்கள் தரவுத்தாள் சேர்க்கை அட்டவணை பள்ளி மண்டலம் தகவல் ஆதாரம்: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2025 (TNGASA 2025)