முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் [Admission Facilitation Centre (AFC)] மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பிக்கும் ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டண விவரம் விண்ணப்பக் கட்டணம் ரூ. 58பதிவுக் கட்டணம் ரூ. 2 SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லைபதிவுக் கட்டணம் ரூ. 2 விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking/UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai 15" என்ற பெயரில் 14.08.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் 14.08.2023 இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 01.09.2023 தொடர்பு எண்கள்: 93634 62070, 93634 62042, 93634 62007, 93634 62024 இயக்குநர்செய்து மக்கள் தொடர்புத்துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9