தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை மாணவர்களுக்காக 14417 என்ற உதவி எண்ணை வழங்கியுள்ளது. மாணவர்கள் கல்வி குறித்த தகவல்கள், கல்லூரி சேர்க்கை பற்றிய விபரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்த இலவச உதவி எண்ணைப் பயன்படுத்திப் பயனடையலாம். மேலும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள பல்வேறு படிப்புகள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் வழிகள், மாணவர் சேர்க்கை முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற பல பயனுள்ள காணொளிகளை https://www.youtube.com/@tnschoolsofficial என்னும் இணைப்பில் கண்டு பயனடையலாம். ஆதாரம்: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கானொலிகள்