மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Paramedical Degree Courses) 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கு www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org ஆகிய வலைத்தளங்களில் விண்ணப்பிக்கலாம். வழங்கப்படும் பாடங்கள் Courses Years Bachelor of Pharmacy (B. PHARM) 4 Years B.Sc. Nursing 4 Academic Years of 8 Semesters Bachelor of Physiotherapy (B.P.T.) 4 Years and 6 Months Compulsory Resident Internship Bachelor in Audiology and Speech-Language Pathology (B.ASLP) 4 Years including 1 Year Internship B.Sc. Radiography and Imaging Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Radio Therapy Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Cardio-Pulmonary Perfusion Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Medical Laboratory Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Operation Theatre & Anaesthesia Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Cardiac Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Critical Care Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Dialysis Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Physician Assistant 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Accident & Emergency Care Technology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Respiratory Therapy 3 Years and 1 Year Compulsory Resident Internship Bachelor of Optometry (B.OPTOM) 3 Years and 1 Year Compulsory Resident Internship Bachelor of Occupational Therapy (B.O.T.) 4 Years and 6 Months Compulsory Resident Internship B.Sc. Neuro Electro Physiology 3 Years and 1 Year Compulsory Resident Internship B.Sc. Clinical Nutrition 3 Years and 1 Year Compulsory Resident Internship அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 3000. விண்ணப்பிக்கத் தகுதிகள் விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். பிறப்பிடம் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். வயது அனைத்து பாடங்களுக்கும்(B.Sc. Nursing தவிர) விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31, 2023 அன்று 17 வயது நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். B.Sc. Nursing விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31, 2023 அன்று 17 வயது நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். பொதுபிரிவினர் பிற்படுத்த / பிற்படுத்த (இஸ்லாமியர்) / மிகவும் பிறப்படுத்தப்பட்ட / குறியிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31, 2023 அன்று 30 வயதை நிறைவு செய்தவராக இருத்தல் கூடாது. பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31, 2023 அன்று 35 வயதை நிறைவு செய்தவராக இருத்தல் கூடாது. கல்வித் தகுதி தமிழக மாநில மேல்நிலை கல்வி வாரியம் அல்லது வேறு ஏதேனும் அதற்குச் சமமான வாரியத்தால் நடத்தப்படும் மேல்நிலை தகுதித் தேர்வின் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களுடன் பின்வரும் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். B.PHARM, BASLP & B.OPTOM ஆங்கிலம் பாடத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் வேறு ஏதேனும் படிப்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் இயற்பியல், வேதியியல், கணிதவியல் மற்றும் ஏதேனும் படிப்பு For All Courses(Except B.PHARM, BASLP & B.OPTOM) இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் வேறு ஏதேனும் படிப்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பாடம் OC BC/BCM/MBC & DNC SC/SCA/ST B.PHARM & BASLP மேற்கூறிய பாடங்களில் 40% மொத்த மதிப்பெண்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேற்கூறிய பாடங்களில் 40% மொத்த மதிப்பெண்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேற்கூறிய பாடங்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் B.Sc. Nursing மேற்கூறிய பாடங்களில் 45% மொத்த மதிப்பெண்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேற்கூறிய பாடங்களில் 40% மொத்த மதிப்பெண்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேற்கூறிய பாடங்களில் 40% மொத்த மதிப்பெண்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் For all courses (Except B.PHARM, BASLP & B.Sc. Nursing) மேற்கூறிய பாடங்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேற்கூறிய பாடங்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேற்கூறிய பாடங்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள பாடங்களுடன் வேறு ஏதேனும் சமமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் பெற்ற தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை இணையதளம் மூலம் www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org ஆகிய வலைத்தளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி/தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாக சென்று அங்குள்ள இணையதள உதவிமையத்தை அணுகி இணையதள விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலுள்ள தகவல் தொகுப்பேட்டுனை தரவிறக்கம் செய்து அச்சுப்படி எடுத்து கவனமாகப் படித்து பின் இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கட்டாயமாக நிரப்பப்பட வேண்டிய தகவல்களையும் சமர்ப்பிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத இணையதள விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது. மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட இணையதள விண்ணப்பத்தினையும் தேவையான சான்றிதழ்களையும் 28.06.2023 மாலை 5 மணி அல்லது அதற்கு முன் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பிறகு, விண்ணப்பிப்பதற்கும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கும் நேரத்தை நீட்டிப்பதற்கான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எந்தவொரு கூடுதல் ஆவணங்களும்/இணையதள விண்ணப்பமும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பதிவேற்றம் செய்ய முடியாது. விண்ணப்பதாரர்கள் அனைத்து கட்டாய விவரங்களையும் பதிவு செய்து தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து சமர்ப்பித்த பின் எந்தவொரு விவரத்தையும் மாற்றுவதற்கான கோரிக்கை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு இணையதள விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுதிறார்கள். ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தால், அவர் சமர்ப்பித்த விண்ணப்பங்களில் ஒரே ஒரு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் சமர்ப்பிக்கும் போது இணையதள விண்ணப்பத்தில் நிரப்பப்பட்ட அனைத்து தகவல்களும் சரியானவை என்பதை விண்ணப்பதாரர் உறுதி செய்த பின்னரே பதிவேற்ற செய்ய வேண்டும். மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட இணையதள விண்ணப்பத்தினையும் தேவையான சான்றிதழ்களையும் 28.06.2023 மாலை 5 மணி அல்லது அதற்கு முன் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம் இணையதள விண்ணப்பக் கட்டணம் ரூ. 5௦0 வங்கி இணையதள சேவை மூலம் செலுத்தவேண்டும். இணையதள கலந்தாய்வு தரவரிசை பட்டியல் தேர்வுக் குழுவால், தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீட்டின்படி, www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தரவரிசை பட்டியலின்படி இணையதள கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். அப்பொழுது அவர்கள் தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தாங்கள் விரும்பும் படிப்பு மற்றும் கல்லுரியைத் தேர்ந்தெடுக்கலாம். கலந்தாய்விற்க்கான அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்து உறுதிப்படுத்தலாம். மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை இணையதள கலந்தாய்வு மூலமாக தரவரிசையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு விதிகளின்படி நடைபெறும். முன்னாள் இராணுவ வீரர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு பொதுப்பிரிவினற்கான கலந்தாய்வுக்கு முன் நடைபெறும். அவர்கள் மறுஒதுக்தீடு மற்றும் கல்லூரி மாற்றம் செய்ய இயலாது. இணையதள வழியான கலந்தாய்வில் பங்குபெற விரும்புவர்கள் அதற்கான செயல்முறை கட்டணமாக ரூபாய் இருநூற்று ஐம்பதை வங்கிக்கு பணம் செலுத்தும் இணைய முகப்பு மூலம் இணையதளத்தில் செலுத்த வேண்டும். இணையதள கலந்தாய்வின் பொழுது விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். அவர்களுக்கான தரவரிசைத் தகுதியின் படியும் மற்றும் இட ஒதுக்கீட்டியின் படியும் அவர்கள் கேட்ட இடங்கள் இருந்தால் அவைகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து அதில் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்கு முன்னதாக சேர வேண்டும். முதலாம் கட்ட கலந்தாய்வில் தேர்ந்தெடுத்த இடங்களில் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த கட்ட கலந்தாய்வுகளில் கல்லூரி மாற்றத்திற்கான மறுஒதுக்கட்டில் பங்கேற்க தகுதியுள்ளவராவார்கள். அந்த கலந்தாய்விற்கான தேதிகள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படமாட்டாது. மாணவர் சேர்க்கை தொடர்பான மேலும் தகவல்களுக்கு www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org வலைத்தளங்களைப் பார்க்கவும். உதவி எண்கள் 044-29862045 044-29862046 044-28363822 044-28364822 044-28365822 044-28366822 044-28367822 044-28361674 ஆதாரம்: www.tnhealth.tn.gov.in