தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் [Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)] 1989-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவம், விலங்கு மற்றும் உணவு அறிவியல் துறைகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் சிறந்து விளங்குவதை உறுதி செய்வதில் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கால்நடை மற்றும் கோழி உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது. உறுப்புக் கல்லூரிகள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்பது உறுப்புக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. வ. எண் உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges) 1 சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை 600 007Madras Veterinary College, Chennai 600 007 2 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் 637 002Veterinary College and Research Institute, Namakkal 637 002 3 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி 627 358Veterinary College and Research Institute, Tirunelveli 627 358 4 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் 614 625Veterinary College and Research Institute, Orathanadu, Thanjavur 614 625 5 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம் 636 112Veterinary College and Research Institute, Thalaivasal Koot Road, Salem 636 112 6 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி 625 602Veterinary College and Research Institute, Veerapandi, Theni 625 602 7 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை 642 205Veterinary College and Research Institute, Udumalpet 642 205 8 உணவு மற்றும் பால்பண்ணை தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவெளி, சென்னை 600 052College of Food and Dairy Technology, Koduveli, Chennai 600 052 9 கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் 635 110College of Poultry Production and Management, Hosur 635 110 கால்நடை மருத்துவக் கல்லூரி கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் வ. எண் பட்டப்படிப்புகள் ஆண்டுகள் 1 கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புBachelor of Veterinary Science & Animal Husbandry (BVSc & AH) 4 ½ ஆண்டுகள் + 1 வருட உள்ளிருப்பு பயிற்சி4½ Years + 1 Year Internship 2 உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புB.Tech. Food Technology 4 ஆண்டுகள்4 Years 3 கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புB.Tech. Poultry Technology 4 பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புB.Tech. Dairy Technology மொத்த இடங்கள் பட்டப்படிப்புகள் மொத்த இடங்கள் கல்லூரி கால்நடை மருத்துவம் மற்றும்கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு(4 ½ ஆண்டுகள் + 1 வருட உள்ளிருப்பு பயிற்சி) 660* 120* சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிசென்னை 600 007 100 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்நாமக்கல் 637 002 100 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்திருநெல்வேலி 627 358 100 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்ஒரத்தநாடு, தஞ்சாவூர் 614 625 80** கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்தலைவாசல், கூட்டு ரோடு, சேலம் 636 112 80** கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்வீரபாண்டி, தேனி 625 602 80** கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்பண்ணைக்கிணறு, உடுமலைப்பேட்டை 642 205 உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு 40 உணவு மற்றும் பால்பண்ணை தொழில்நுட்பக் கல்லூரிகொடுவெளி, சென்னை 600 052 கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு 40 கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரிஓசூர் 635 110 பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு 20* உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகொடுவெளி, சென்னை 600 052 *தமிழக அரசு மற்றும் இந்திய கால்நடை மருத்துவ குழுமத்தின் (Veterinary Council of India)/இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (Indian Agricultural Research Institute) ஆணைக்கேற்ப மாற்றத்திற்கு உட்பட்டது.**இந்திய கால்நடை மருத்துவக் குழுமத்தின் ஆணைக்கேற்ப மாற்றத்திற்கு உட்பட்டது. குறிப்பு BVSc & AH பட்டப்படிப்பில் 15 சதவீத இடங்கள் இந்திய கால்நடை மருத்துவக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. B.Tech. Food Technology பட்டப்படிப்பில் 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தகுதிகள் பிறப்பிடம் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 8, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அவர்கள் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பள்ளிகளில் 8, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இருப்பிடச் சான்றிதழை இணைக்க வேண்டும். இருப்பிடச் சான்றிதழில் "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-51 இல் இளங்கலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர் பிறப்பால் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்" என்ற வாக்கியம் கட்டாயமாக இருக்க வேண்டும். தகுதித் தேர்வுகள் மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் மேல்நிலை பாடத்திட்டம் (10+2)/சிபிஎஸ்இ (CBSE)/அதற்கு சமமாக அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் தேர்வில் (வழக்கமான முறை) [Any Other Examination (Regular Mode)] தேர்ச்சி பெற்று பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்: மார்ச் 2019 முதல் தமிழ்நாடு மாநில வாரியத்தின் HSC தேர்வு எழுதியவர்கள், 11 ஆம் வகுப்பு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அரசாணை நிலை எண் 195, பள்ளிக் கல்வித் துறை, நாள்: 14.09.2018). விண்ணப்பதாரர் பெற்ற கல்வித் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே மொத்த மதிப்பெண் கணக்கீட்டிற்கு (Aggregate Mark Calculation) பரிசீலிக்கப்படும். இணைப் பாடத்திட்டம்/பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளுக்கான கருணை மதிப்பெண்கள் (Grace Marks For Co-Curricular/Extracurricular Activities) கருத்தில் கொள்ளப்படாது. பட்டப்படிப்புகள் பன்னிரண்டாம் வகுப்பில் (அதற்கு சமமான)படித்த பாடங்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் (%) OC BC/BCM MBC/DNC SC/SCA/ST கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) 1. உயிரியல்/விலங்கியல் மற்றும் தாவரவியல் 60 60 55 தேர்ச்சி 2. வேதியியல் மற்றும் இயற்பியல் சேர்ந்து 60 60 55 தேர்ச்சி (1) மற்றும் (2) ஆகியவற்றின் மொத்தம் 70 65 60 தேர்ச்சி உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புகோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புபால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு 1. கணிதம் 60 60 55 தேர்ச்சி 2. உயிரியல் 60 60 55 தேர்ச்சி 3. வேதியியல் மற்றும் இயற்பியல் சேர்ந்து 60 60 55 தேர்ச்சி (1), (2) மற்றும் (3) ஆகியவற்றின் மொத்தம் 70 65 60 தேர்ச்சி அதிகபட்ச முயற்சிகள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அதிகபட்ச முயற்சிகள் (Maximum Number of Attempts) SC/SCA/ST பிரிவினருக்கு மூன்று மற்றும் பிற விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறைந்தபட்சம்: 31.12.2023 தேதியின்படி 17 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதிகபட்சம்: 01.07.2023 தேதியின்படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். SC/SCA/ST வகுப்பினர்: வயது வரம்பு இல்லை பிற வகுப்பினர்: 21 வயது மாற்றுத் திறனாளிகள்: அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள்/சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து 30.06.2023 மாலை 5 மணிக்குள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நிகழ்நிலையில் (Online Application) சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் BVSc & AH அல்லது B.Tech. ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றுக்கு தனியாக விண்ணப்பிக்கலாம் (அல்லது) BVSc & AH மற்றும் B.Tech. ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் சேர்ந்து விண்ணப்பிக்கலாம். B.Tech. Food Technology, B.Tech. Poultry Technology மற்றும் B.Tech. Dairy Technology ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஒரே விண்ணப்பம் (Single Pooled B. Tech Application) மூலம் தங்கள் விண்ணப்பத்தை நிகழ்நிலையில் (Online) சமர்ப்பிக்கலாம். நிகழ்நிலையில் (Online) விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் BVSc & AH படிப்புக்கான வளாக விருப்பம் (Campus Preference) மற்றும் B.Tech. படிப்பு விருப்பம் (Course Preference) ஆகியவற்றை வழங்க வேண்டும். இது நிகழ்நிலை கலந்தாய்விற்கு (Online Counselling) பரிசீலிக்கப்படும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, வளாக விருப்பம் (BVSc & AH)/படிப்பு விருப்பம் (B.Tech.) ஆகியவற்றை மாற்ற முடியாது. எனவே, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கு முன்பு வளாகம்/பாட விருப்பத்தை கவனமாக தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கலந்தாய்வு BVSc & AH மற்றும் B.Tech. பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in வெளியிடப்படும் தகுதி வரிசை (Order of Merit), தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு விதிகள் (Rules of Reservation of Government of Tamil Nadu) மற்றும் விண்ணப்பதாரர் தேர்வு செய்த வளாக விருப்பம் (Campus Preference) மற்றும் B.Tech. படிப்பு விருப்பம் (Course Preference) ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்நிலை கலந்தாய்வு (Online Counselling) நடத்தப்படும். தகுதியானவர்கள் நிகழ்நிலை கலந்தாய்வில் (Online Counselling) பங்கேற்க பதிவு செய்ய வேண்டும். கலந்தாய்வு பற்றிய விரிவான தகவல்களுக்கு https://adm.tanuvas.ac.in இணையதளத்தைப் பார்க்கவும். மேலும் தகவல்களுக்கு https://adm.tanuvas.ac.in இணையதளத்தைப் பார்க்கவும். தொடர்பு விவரங்கள் The ChairmanAdmission CommitteeTamil Nadu Veterinary and Animal Sciences UniversityMadhavaram Milk Colony, Chennai 600 051Phone: +91-44-29997349 / 91-44-29997348Email: admission@tanuvas.org.in தொடர்புடைய இணைப்புகள் தகவல் கையேடு நிகழ்நிலை விண்ணப்பம் மாணவர் சேர்க்கை அறிவிப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆதாரம்: https://adm.tanuvas.ac.in/