தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025 தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள இணையதள வாயிலான விண்ணப்ப பதிவு 07.05.2025 முதல் 06.06.2025 வரை நடைபெறும். இணையதள வாயிலான விண்ணப்பப் பதிவு முகவரி - - www.tneaonline.org மேற்கண்ட இணையதளத்தில் மாணாக்கர்கள் பயன்பெறும் பொருட்டு கீழ்வரும் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் முறை சான்றிதழ்கள் பதிவேற்றும் முறை ( ஒலி, ஒளி வாயிலாக) கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்லூரி பாடப்பிரிவு மற்றும் வகுப்பு வாயிலாக மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட் ஆஃப் மற்றும் தரவரிசை விவரங்கள் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் பற்றிய விவரங்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்வதற்கான சான்றிதழ் மாதிரிகள் விண்ணப்பப் பதிவு கட்டணம் OC/BC/BCM/MBC&DNC பிரிவினர்க்கு ரூ.500, SC/SCA/ST பிரிவினர்க்கு ரூ.250. இது தவிர, கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான முன் வைப்புத் தொகை / கலந்தாய்வு கட்டணம் எதுவும் இல்லை. இணையதள வசதி இல்லாத மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் அழைப்பு எண் : 1800-425-0110 மேலும் மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கால அட்டவணை வ.எண். நிகழ்வுகள் TNEA 2025 - மொழியப்பட்ட தேதிகள் A அறிவிப்பு வெளியீடு இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவுசெய்தல் விண்ணப்பங்களை நிரப்புதல் அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல் 07.05.2025 B விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 06.06.2025 அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதிநாள் 9.06.2025 C சமவாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் 11.06.2025 D சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் நாட்கள் (இணையதள வாயிலாக) 10.06.2025 முதல் 20.06.2025 வரை E தரவரிசைப் பட்டியல் வெளியீடு 27.06.2025 F சேவை மையம் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்தல் 28.06.2025 முதல் 2.07.2025 வரை G அரசு பள்ளிகளில் பயின்ற சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு (இணையதள வாயிலாக) மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர் விளையாட்டு கலந்தாய்வு தேதிகள் AICTE-யின் கல்விசார் அட்டவணைக்கு ஏற்ப அறிவிக்கப்படும் H பொது பிரிவு - சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு (இணையதள வாயிலாக) மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர் விளையாட்டு I பொதுக்கலந்தாய்வு (இணையதள வாயிலாக) பொதுக்கல்வி தொழில்முறை கல்வி அரசுபள்ளி 7.5% ஒதுக்கீடு J துணைக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக) K எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி வகுப்பிற்கான கலந்தாய்வு (இணையதள வாயிலாக) L கலந்தாய்வு இறுதி நாள் பயனுள்ள காணொலிகள் TNEA Registration Demo Video பயனுள்ள இணைப்புகள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மற்றும் கையேடு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முறை மேலும் விபரங்களுக்கு www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை