தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை முதலாமாண்டு B.E./B.Tech./B.Arch. பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள்/அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023-24ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை https://www.tneaonline.org or https://www.dte.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யவேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் மேற்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் பதிவு செய்யும் நாள் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். துவங்கும் நாள்: 05.05.2023முடிவுறும் நாள்: 04.06.2023 விண்ணப்பப் பதிவுக் கட்டணம் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking/UPI இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், "The Secretary TNEA" payable at Chennai என்ற பெயரில் 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையைப் பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம். பிரிவினர் பதிவுக் கட்டணம் OC/BC/BCM/MBC/DNC 500 SC/SCA/ST 250 கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்காணும் இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுதே அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும். மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரி பார்க்கும்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட மாணாக்கரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரி செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரி பார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும். தொடர்பு விவரங்கள் தொடர்பு எண்: 044 2235 1014 / 1015அழைப்பு எண்: 1800 425 0110Email: tneacare@gmail.com செயலாளர்தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9