பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மத்திய கல்வி அமைச்சகத்தின் [Ministry of Education, (MoE)] கீழ் 2023-23 ஆம் கல்வியாண்டில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் (Central Universities) உள்ள அனைத்து இளங்கலை பட்டப்படிப்புகளிலும் (Undergraduate Programmes) சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு [Common University Entrance Test (CUET)] தேசியத் தேர்வு முகமையால் [National Testing Agency (NTA)] நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும்,, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பொது தளத்தையும் சம வாய்ப்பையும் வழங்கும் நோக்கத்துடன் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) நடத்தப்படுகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான ஒரே தேர்வாக பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) உள்ளது. கணினி அடிப்படையிலான (CUET (UG) - 2023) தேர்வு [Computer Based Test (CBT)] இந்தியா முழுவதும் 13 மொழிகளில் நடத்தப்படும். தேர்வு முறை பிரிவு IA: 13 மொழிகள் (13 Languages) பிரிவு IB: 20 மொழிகள் (20 Languages) பிரிவு II: 27 துறை சார்ந்த பாடங்கள் (27 Domain Specific Subjects) பிரிவு III: பொதுத் தேர்வு (General Test) முக்கிய தேதிகள் விண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் பிப்ரவரி 9, 2023 முதல் மார்ச் 30, 2023 வரை தேர்வு நடைபெறும் நாட்கள் மே 21, 2023 முதல் மே 31, 2023 வரை வலைத்தளங்கள்/உதவி எண்கள்/மின்னஞ்சல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு - 2023 [Common University Entrance Test – 2023 (CUET - 2023)] குறித்த தகவல்களுக்கு www.nta.ac.in and www.cuet.samarth.ac.in வலைத்தளங்களைப் பார்க்கவும். பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு - 2023 [Common University Entrance Test – 2023 (CUET - 2023)] குறித்த சந்தேகங்கள்/தகவல்களுக்கு பின்வரும் உதவி எண்கள்/மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்: மின்னஞ்சல்: cuet-ug@nta.ac.inஉதவி எண்கள்: 011- 40759000 / 011-69227700 முக்கிய இணைப்புகள் CUET (UG) - 2023 Information BulletinCUET (UG) - 2023 SyllabusCUET (UG) - 2023 RegistrationNTA Mock Test ஆதாரம்: www.nta.ac.in and www.cuet.samarth.ac.in