மத்திய மீன்வளம், கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனம் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் (Ministry of Fisheries, Animal Husbandry and Dairying) கீழ் இயங்கும் மத்திய மீன்வளம், கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனம் [Central Institute of Fisheries Nautical and Engineering Training (CIFNET)] நாட்டின் மீன்பிடித் தொழிலை வலுப்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இக்கல்வி நிறுவனத்தில் 2023-24 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வழங்கப்படும் படிப்புகள் 2 வருட கப்பல் வழிகாட்டி படிப்பு [Vessel Navigator Course (VNC)] 2 வருட கடல்சார் ஃபிட்டர் படிப்பு (Marine Fitter Course (MFC)] இந்த இரண்டாண்டு படிப்புகளின் செய்முறைப் பயிற்சி ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலில் மேற்கொள்ளப்படும். சிஃப்னெட் நிறுவனத்தின் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் படிப்புகள் நடத்தப்படும். உதவித்தொகை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்படும். படிப்புகளை முடித்தப் பிறகு நிறுவனப் பயிற்சி வழங்கப்படும். இதற்கான மாதாந்திர உதவித் தொகை ரூ. 20500 சீருடைப் படி (1 முறை) ரூ. 2500. விண்ணப்பிக்கத் தகுதிகள் கல்வித்தகுதி: கணிதம் மற்றும் அறிவியலில் தனித்தனியே 40 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது: 2023 ஆகஸ்ட் 1-ந் தேதி நிலவரப்படி 15 முதல் 20 ஆண்டுகள். பட்டியல்/பழங்குடியினத்தவருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. 3 இடத்திலும் சேர்த்து 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அகில இந்திய அடிப்படையிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை 2023-24 ஆம் ஆண்டுக்கான வகுப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை நிறுவனத்தின் www.cifnet.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்துடன் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.350 (பொதுப் பிரிவு/ ஓபிசி) ரூ. 175 (எஸ்சி/எஸ்.டி) விண்ணப்பிக்க கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 25.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது நுழைவுத் தேர்வு பொது நுழைவுத் தேர்வு [Common Entrance Test (CET)] அன்று 05.08.2023 கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா ஆகிய மையங்களில் நடைபெறும். முக்கிய தேதிகள் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் 05.08.2023 நிறுவன இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் 11.08.2023 CIFNET கொச்சியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள் 18.8.2023 ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்