WSAI பற்றி 2024 இல் நிறுவப்பட்ட, வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் & ஏஐ (WSAI) ஆனது, சமூகத்திற்கு நேரடித் தொடர்புள்ள, தாக்கத்தை ஏற்படுத்தும் சவால்களை மேற்கொள்ள, தரவு அறிவியல் மற்றும் AI இன் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பல ஆசிரியர்களை ஒன்றிணைத்து செயல்படுகிறது. இப்பள்ளியானது ஐஐடி மெட்ராஸில் 18வது மற்றும் புதிய துறையை (தரவு அறிவியல் மற்றும் AI துறை) உள்ளடக்கியது. பல ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஆர்வமுள்ள குழுக்களுடன் இணைந்து ஒரு துடிப்பான ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைத்து பொலிவான ஆராய்ச்சி பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. BTech (AI & டேட்டா அனலிட்டிக்ஸில்) , MTech (தரவு அறிவியல் மற்றும் AI) மற்றும் பல திட்டங்களை சர்வதேச மாணவர்களுக்கு வழங்கயுள்ளது. தகுதி அளவுகோல்கள் எந்தவொரு இந்தியப் பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்திலும், தங்களுடைய 2-ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்பின் (வழக்கமான/முழுநேர பொறியியல் அல்லது அறிவியலின்) முதல் ஆண்டிலோ அல்லது 4-ஆண்டு பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டிலோ அல்லது இரட்டை பட்டம் அல்லது அதற்கு சமமான (பொறியியல் அல்லது அறிவியலில் வழக்கமான/முழுநேர) 3 வது அல்லது 4 வது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சித் திட்டம் (இன்டர்ன்ஷிப்) திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம் விண்ணப்பப் படிவ இணைப்பு: https://forms.gle/W21Y1aFDLodUvLaw9 குறிப்பு இன்டர்ன்ஷிப் ஏப்ரல் 2026 இல் தொடங்கும். பயிற்சி காலம் - குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் 6 மாதங்கள். நேரில் பங்குபெற வேண்டிய கோடைகாலப் பயிற்சியாகும். பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படாது. பயிலும் நிறுவனத்திடம் இருந்து மாணவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப காலக்கெடு விண்ணப்ப காலக்கெடு: பிப்ரவரி 15, 2026 ஆதாரம்: WSAI சம்மர் இன்டர்ன்ஷிப்