உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை (Higher Educational Special Scholarship) பழங்குடியின மாணவ / மாணவியர்களின் உயர் கல்விக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை உயர் கல்விக்கான கடன் உதவித்தொகை திட்டத்தை 2002-03 ஆம் ஆண்டு முதல் “உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை” (HESS) எனப்படும் மானிய அடிப்படையிலான திட்டமாக தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் கல்வி நிறுவனத்துடன் இணைந்த விடுதிகளில் கட்டணம் கட்டி தங்கி பயின்று வரும் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்முறை கல்வி மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய மாணவ / மாணவியர்கள் பயன் பெறுவார்கள். தகுதி நிலை பழங்குடியின மாணவ / மாணவியர்கள் கல்வி நிறுவனத்துடன் இணைந்த விடுதிகளில் கட்டணம் கட்டி தங்கி பயிலும் மாணவ / மாணவியர்கள் பெற்றோர் / பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2013-2014 முதல் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவ / மாணவியர்கள் உதவித்தொகை இத்திட்டத்தின் கீழ் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 7500 உதவித்தொகையும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் மாணவ / மாணவியர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்: திட்ட அலுவலர் / மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் நிறுவனத்தின் தலைவர் ஆதாரம்: தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை