சுவர்ணஜெயந்தி பெல்லோஷிப்ஸ் திட்டம் இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் இளம் விஞ்ஞானிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியைத் தொடர வழிவகுக்கிறது. சுவர்ணஜெயந்தி பெல்லோஷிப்ஸ் திட்டம் இந்தியாவின் ஐம்பதாம் ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் "சுவர்ணஜெயந்தி பெல்லோஷிப்ஸ்" என்ற திட்டத்தை இந்திய அரசு நிறுவியது. இந்தத் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த இளம் விஞ்ஞானிகளுக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடிப்படை ஆராய்ச்சியைத் தொடர சிறப்பு உதவிகளும் ஆதரவும் வழங்கப்படுகின்றன. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி சுதந்திரமாக தடையற்ற ஆராய்ச்சியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள். புதுமையான யோசனைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு திட்டங்கள் இருத்தல் அவசியம். இந்தத் திட்டம் விஞ்ஞானிகள் சார்ந்ததாகும்; நிறுவனம் சார்ந்தது அல்ல. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் கண்காணிப்புக்கு உட்பட்டதாகும். இந்த பெல்லோஷிப்பானது நிறுவனத்திடமிருந்து (parent Institute) பெறப்படும் சம்பளத்திற்கு கூடுதலாக மாதத்திற்கு ரூ. 25000 என்ற அடிப்படையில் 5 வருட காலத்திற்கு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் (SERB) நிதியுதவிக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும். தகுதி அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி / ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள இந்திய நாட்டினர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் அறிவியல் / பொறியியல் / மருத்துவத்தில் முனைவர் பட்டம் (பி.எச்.டி.) பெற்றிருக்க வேண்டும், மேலும், இந்திய அரசாங்கத்தின் வேறு எந்தத் திட்டத்திலிருந்தும் உதவித்தொகை பெறக்கூடாது. எப்படி விண்ணப்பிப்பது தகுதி வாய்ந்த விஞ்ஞானிகள் ஆன்லைன் விண்ணப்பங்களை டிஎஸ்டி (DST) இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) இணையதளத்தை பார்க்கவும். ஆதாரம்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி)