பிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை கொடுக்கும் திட்டத்தை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிஎச்.டி. பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகை

பிஎச்.டி. பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.

இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு, ஒரு மாணவர் அரசு அல்லது அரசு உதவித் தொகைப் பெறும் கல்லூரியில் பிஎச்.டி. பதிவு செய்திருக்க வேண்டும். ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கலாம். எம்.பில். முடித்தவராக இருக்க வேண்டியது அவசியம்.

முதுகலைப் பட்டப்படிப்பில் 60 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறாத மாணவராகவும் இருக்க வேண்டும்.

பகுதி நேரமாக பிஎச்.டி. பயிலும் மாணவருக்கு இந்த உதவித் தொகை தரப்படமாட்டாது.

ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு உதவித் தொகை பெறும் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3000 உதவித் தொகையாக வழங்கப்படும்.