இடஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில் கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் படிப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புற மாணவர்கள். கிராமப்புறக் கல்வியின் மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது. படிப்புகள் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பின்வரும் தொழில் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகித இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் வேளாண்மை கால்நடை மருத்துவம் மீன்வளம் சட்டம் பயணர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பின்வரும் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன் பெறுகிறார்கள். அரசுப் பள்ளிகள் மாநகராட்சிப் பள்ளிகள் நகராட்சிப் பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் கள்ளர் சீர்திருத்தப் பள்ளிகள் வனத்துறைப் பள்ளிகள் அரசு துறைகளினால் நிர்வகிக்கப்படும் பிற பள்ளிகள் கட்டணம் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய பின்வரும் செலவுகள் அனைத்தையும் தமிழ் நாடு அரசு ஏற்றுக்கொள்ளும். கல்விக் கட்டணம் விடுதிக் கட்டணம் கலந்தாய்வுக் கட்டணம் ஆதாரம்: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை