இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கோடை காலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கும் குரானா புரோகிராம் (Khorana Program for Scholars) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. குரானா புரோகிராம் இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான டாக்டர் ஹர். கோவிந்த் குரானா 1968 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இவர் நினைவாக 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குரானா புரோகிராம், இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறை (DBT), இண்டோ-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (IUSSTF) மற்றும் வின்ஸ்டெப் ஃபார்வர்ட் (WINStep Forward) ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது. இந்திய மாணவர்கள் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகம் (University of Wisconsin-Madison) மற்றும் இத்திட்டத்தோடு இணைந்துள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் கோடை காலத்தில் 10 முதல் 12 வார காலத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்புகளை குரானா புரோகிராம் வழங்கும். விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பயிலும் மாணவர்கள் விண்ணபிக்க தகுதியுடையவர்கள். பயோடெக்னாலஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளான (வேளாண்மை, உணவு, சுகாதாரம், பயோமெடிக்கல் சயின்ஸ் மற்றும் கம்ப்யூடேஷனல் சயின்சஸ், பிக் டேட்டா, மெஷின் லேனிங்) ஆகிய துறைகளில் பி.டெக்., எம்.டெக்., பி.எஸ்சி, எம்.எஸ்சி., பி.இ., எம்.இ., எம்.எஸ்., ஒருங்கிணைந்த பி.எஸ்-எம்.எஸ்., பி.வி.எஸ்சி., எம்.வி.எஸ்சி., பி.பார்ம்., எம்.பார்ம், எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.எம்.எஸ்.டி. படிப்பவர்கள் விண்ணபிக்கலாம். முதலாம் ஆண்டு, இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.) மேற்கொண்டுள்ள மாணவ மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். உதவித் தொகை தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உதவித் தொகை, மருத்துவ காப்பீடு மற்றும் விமான கட்டணம் ஆகியவை வழங்கப்படும். இத்திட்டம் பற்றி மேலும் தகவல்கள் பெற இண்டோ-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு இணையதளத்தை பார்க்கவும். ஆதாரம்: இண்டோ-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு இணையதளம்