தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. உதவித் தொகை தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி,மதம் மற்றும் பெற்றோரின் வருமான வரம்பினைக் கணக்கில் கொள்ளாமல் கீழ்க்காணும் விகிதத்தில் உதவித்தொகை மற்றும் தனிமானியம் வழங்கப்படுகிறது. 1-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாதம் ரூ. 110 (விடுதியில் தங்காது பயிலும் மாணவ/ மாணவியருக்கு) 3-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாதம் ரூ. 700 (விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ/ மாணவியருக்கு) தனி மானியம் விடுதியில் தங்காது பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ. 750 விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது